-
Sivaji & Dubai Media
இன்னும் விடாத சிவாஜி ஜுரம் பற்றிப்பரவுகிறது துபாய் மீடியாவிலும். இன்றைய 7days செய்தித்தாளின் முதல் பக்கத்தை அலங்கரிக்கிறது ரஜினி நிறைய வீடியோகேம்களின் இடையே சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம். துபாயிலுள்ள ரஜினி ரசிகர் மன்றம் labourers க்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சொல்கிறது செய்தி.
-
Skin Drafting
பொதுவாக Skin Drafting எனப்படுவது plastic surgery ல் தோலின் நிறம் மாற்றும் தொழில்நுட்பம். (மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் pls). Computer Graphics லும் அதே வேலையைத்தான் செய்கிறது இதே தொழில்நுட்ப பெயரில். “ஒரு கூடை சன்லைட்” பாடலை பார்க்கும்போது நம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த சிவப்பு மற்றும் வெள்ளை ரஜினியை, அந்த நிறத்திற்கு மாற்றியது இதே Skin Drafting டெக்னாலஜிதான்.
-
காணவில்லை – 2
காணவில்லை – 1 1. கவிஞர் சங்கரராமசுப்ரமணியன் தனது “சிங்கத்துக்கு பல் துலக்கும் வேலை” என்கிற கவிதை மூலமாக சிற்றிதழ்களில் பிரபலமானவர். (அக்கவிதையினால் தனது வேலையை இழந்தார் என்றும் சொல்ல கேள்விப்பட்டதுண்டு.) நன்கு கணினி அலுவலக ஊழியர் போல உடை அணிந்திருப்பார். கடைசியாக ராஜ் டிவியில் ஊர்வசி நடத்திய ஒரு நிகழ்ச்சியின்போது இவரின் பெயரை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். கவிஞர் சங்கரராமசுப்ரமணியன் அவர்களை காணவில்லை.
-
ஆன்மீகம் என்பது…
ஆன்மீகம் என்பது ஒரு வகையான ஹானஸ்டி. நமக்கு நாமே உண்மையா இருக்கும்போது அதை உணரமுடியும். – சஞ்சய் சுப்ரமணியம்
-
Creativity Rights – Boundaries/Limits
…என்ற தலைப்பில் கருத்து.காம் அமைப்பின் கருத்தரங்கம் 20-6-2007 அன்று Russian Cultural Centre ல் நடைபெற இருக்கிறது. தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், ஒவியர் வீர.சந்தானம்,ராதாராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சென்னை நண்பர்களின் கவனத்திற்கு…
-
பயம்!
“Hippopotomonstrosesquippedaliophobia” என்றால் பெரிய வார்த்தைகளைக்கண்டு ஏற்படும் பயம் என்பதைக்குறிக்கும் ஆங்கில சொல்லாம். (….is the fear of long words). நிஜமாவே பயமாதான் இருக்கு.
-
வாழ்த்துக்கள்
மீண்டும் clay court ல் அடிவாங்கிய Federarkku அனுதாபங்கள். அதிரடியாய் hatrick அடித்த nadal க்கு வாழ்த்துக்கள்.
-
சகிக்கவில்லை!
இதுதான் ஒலிம்பிக் 2012 ன் லோகோன்னு சொல்லிருந்தாங்க. பரவாயில்லையேன்னு நினைச்சுட்ருக்கும்போதே இப்படி ஒண்ணு கொண்டு வந்து இதுதான்னு சொல்றாங்களே! என்ன நோக்கத்துல இப்படி பழி வாங்குறாங்கன்னே தெரியலையே. A worst selection!
