• HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • September 10, 2009
      dubai, dubai metro, UAE

      துபாய் மெட்ரோ பராக்!

      ’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது.  நீண்டு நெளிந்து வளைந்து

      மேலும் வாசிக்க…


      • August 17, 2009
        சினிமா, bollywood

        KAMINEY(2009)

        உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே  பிளாக் காமெடி தோய்த்த ஒரு ஆக்‌ஷன் திரில்லர் பார்க்க ஆசைப்பட்டீர்களாயின் கண்டிப்பாக கமீனே உங்களுக்கான திரைப்படம்தான்.  கமீனே என்ற சொல்லை rascals / scoundrels

        மேலும் வாசிக்க…


        • July 16, 2009
          உணவு, வாழ்க்கை, UAE

          இட்லி(ப்)பா!

          அன்புமிகு அமீரக வாசத்தீர்! மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர் சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர் வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர் நினைத்தாலே மனம் குதூகலிக்கும் எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே! இளமஞ்சள் நிறத்தினதாய் இதயத்தை உருக்குவதாய் பதமாய் வார்த்துவைத்த இதமான இட்டிலிகள் இரண்டேனும் உண்டீரேல் அன்பரே அமிர்த்தமதை பூமியில் உண்ட ஆனந்தம் பெருவீரே! அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!

          மேலும் வாசிக்க…


          • July 13, 2009
            சினிமா, tollywood

            ஓய் (oye)!

            நான் தியேட்டருக்கு சென்று பார்த்த தெலுகு படம் ஒன்றே ஒன்றுதான். அது சிரஞ்சீவி நடித்த ‘அஞ்சி’ .அதுவும் . நான் பணிபுரிந்துகொண்டிருந்த நிறுவனம் அதற்கு digital animation & composition செய்திருந்த காரணத்தினால் ஓசி டிக்கெட் கொடுத்தது. படுதிராபையான படம் என்றாலும் எங்களின் கைவண்ணம் சாந்தம் ஸ்கிரீனில் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காகவே சென்றதால் உற்சாகமான அனுபவமாகவே இருந்தது. அதற்கு பிறகு வேறு எந்த தெலுகு படத்திற்கும் நான் தியேட்டரில் சென்று பார்க்க முயற்சி செய்ததில்லை என்றே

            மேலும் வாசிக்க…


            • July 13, 2009
              இசை, சினிமா, பொது, UAE

              சில இசைக்குறிப்புகள்

              கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு கிராமஃபோன் நிகழ்ச்சியை கேட்டேன். முன்பு போலில்லாது அமைதியான இரவை கிழித்துத்துவைக்கும் வண்ணம் விளம்பரதாரர்களின் இரைச்சல் அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஷாலுவின் குரல் என்னதான் குழைந்து கூப்பாடு போட்டாலும் ஒரு பாடலுக்கு ஒரு முறை இடையே வந்து ஒலிக்கும் ஜோய் ஆலுக்காஸின் ஆக்ரமணம்தான் அதிகம். பேசாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட நினைவுகளோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ என்னவோ? ஜேம்ஸ் இசையமைக்க வந்தபோது அவரின் பழைய ஆல்பம் பாடல்களில் ’தேவாலய இசை’ மிகுந்திருப்பதாக

              மேலும் வாசிக்க…


              • June 23, 2009
                பா.ராகவன், புத்தகம், வாழ்க்கை

                எக்ஸலன்ட்- பா.ரா.

                தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.! சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட

                மேலும் வாசிக்க…


                • June 22, 2009
                  பதிவர் சந்திப்பு

                  துபாய் பதிவர் சந்திப்பு – 05-06-09

                  (இடையில் ஏற்பட்டுவிட்ட ஒரு எதிர்பாராத பயணத்தின் காரணமாக மிகத் தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.) பதிவர் சந்திப்புகள் ஒன்றிலும் நான் இதுவரையில் கலந்துகொண்டதில்லை. ஆர்வம் நிறைய இருந்தது. ஆனால் பயணம்,நிகழ்வுக்கான நேரம் ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதிய பதிவர்கள் அழைத்திருக்கிறார்கள் போகலாமா என்று குசும்பன் (என்றும் அழைக்கப்படுகிற சரவணன் ) கேட்டபோது மகிழ்வோடு ஒத்துக்கொண்டேன்.  சுற்றிலும் வேப்பமரங்கள் அடர்ந்த புல்வெளியில் கராமா பார்க்கில் நிகழ்ந்த்து சந்திப்பு. அருகிலேயே வசிக்கும் திரு.சுந்தர் வலைப்பதிவு கூட்டத்திற்கெனவே பிரத்தியேகமாக

                  மேலும் வாசிக்க…


                  • June 2, 2009
                    அரசியல், பயணம், ஸ்ரீரங்கம்

                    srirangam chronicles-2-திருவெறும்பூர் கரும்பு மக்கள்

                    2558 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று திருச்சி மக்களவைத்தொகுதியில் டெபாசிட் இழந்த லதிமுக வேட்பாளர் மன்சூர் அலிகானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் இரண்டு.

                    மேலும் வாசிக்க…


                    • May 31, 2009
                      பயணம், ஸ்ரீரங்கம்

                      srirangam chronicles 1 – முரளி காஃபி கடை

                      ’முரளி கடையில ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம் தம்பி’. கிடைக்க கடினமான ஒரு முக்கியமான டாக்டர் அப்பாயின்மெண்ட்டிற்காக விடியற்காலையில் புறப்பட்ட நேரத்தில் ஆட்டோக்காரனிடம் அப்பா மேற்கண்ட வாக்கியத்தை சொன்னவுடன் சற்றே கோபம் வந்தது முதலில். ஆனால் அந்த நொடியில் நினைத்திருக்கவில்லை ஒவ்வொரு முறையும் அந்த கடையை எவ்வளவு அவசரமாய் கடந்து சென்றாலும் நிதானித்து ஒரு காபி சாப்பிடமால் போவதில்லை என்பதை.

                      மேலும் வாசிக்க…


                      • February 13, 2009
                        சினிமா, posters

                        விண்ணை தாண்டி வருவாயா promos

                        அனேகமாக கெளதம் மேனன் படமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இயக்குனர், மற்ற எந்த விபரங்களும் இல்லாமல் கடந்த வாரம் முழுவதும் வந்துகொண்டிருந்த pre launch விளம்பரங்கள் எல்லாமே பிரமாதமாக இருக்கின்றன. யாராக இருந்தாலும் சின்ன சின்ன விபரங்களை கூட அழகாக பார்த்து வடிவமைத்ததற்கு பாராட்டுக்கள். எனினும் சிம்பு நடிக்கிறார் என்றாலே வரும் final outputபற்றிய பயங்களில்  இருந்து விடுபட முடியவில்லை.

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 … 5 6 7 8 9 … 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                       

                      Loading Comments...
                       

                        • Subscribe Subscribed
                          • சிவராமன் கணேசன்
                          • Already have a WordPress.com account? Log in now.
                          • சிவராமன் கணேசன்
                          • Subscribe Subscribed
                          • Sign up
                          • Log in
                          • Report this content
                          • View site in Reader
                          • Manage subscriptions
                          • Collapse this bar