-
சான் அகாடமி பள்ளியில் உரை
இன்று தாம்பரம் சான் அகாடமி பள்ளியில் reading for development என்னும் தலைப்பில் ஓர் உரையாற்ற அழைத்திருந்தார்கள். பாடப் புத்தகங்கள் தாண்டி, மாணவர்களுக்கு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவது, அதன் தேவையை அவர்களுக்குப் புரியவைப்பது, அதனால் ஏற்படும் நீண்ட காலப்பயன்கள் பற்றி விளக்கமாகச் சொல்வது என்பது ஏற்பாடு. இதனை முழுக்க என்னுடைய பேச்சு, ப்ரசண்டேஷனாக மட்டும் இல்லாமல் எல்லோரும் பங்குபெறும் இயல்பான கலந்துரையாடலாக மாற்றி அமைத்துக்கொண்டு உரையாடினேன். கிட்டத்தட்ட ஐம்பது சதவீதக் குழந்தைகள் ஏற்கனவே பள்ளிப்பாடம் தாண்டிய வாசிப்புக்கு
-
எடிட்டர்
அவனுக்கு அந்தச் சந்தேகம் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் அமானுஷ்யங்களில் நம்பிக்கை கொண்டவன். பேய்க் கதைகள் எழுதுபவன். அதனால் அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என நம்பினான். விஷயம் இதுதான். தொடர் நாவலின் அன்றன்றைய அத்தியாயங்களை அதிகாலையில் எழுந்துதான் எழுதுவான். தினமும், நள்ளிரவு அலுலக வேலைகள் முடிந்து தூங்கப் போகும் முனபு ஒரு காரியம் செய்வான், கணினியில் புதிதாக ஒரு கோப்பைத் திறந்து அத்தியாய எண்ணை எழுதி, அதன் முதற்சொல்லையோ, இரண்டு வாக்கியங்களையோ, ஒன்றும் தேறவில்லையென்றால் அத்தியாயத்திற்கு
-
கையில் மலர்ந்த செளகந்திகம்
[2024ம் வருடம் எழுத்தில் என்ன செய்தேன் என்ற தலைப்பில் எழுதிய ஆண்டறிக்கை. அந்த வருடத்தின் கடைசி வாரத்தில் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் பிரசுரமானது] இந்த வருடத்தின் (2024) முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது. அமீரகத்தில்,
-
G இன்றி அமையாது உலகு
* கூகுள் என்ற சொல்லுக்குப் பொருள் உள்ளதா? * ‘இணையத்தில் தேடு` என்ற பதத்தைக் ‘கூகுள் செய்’ என்றே மாற்றியமைத்தது காலமா? அல்லது கார்ப்பரேட் தந்திரமா? * கல்லூரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட கூகுள் தேடுபொறி எப்படி இத்தனை பெரிய நிறுவனமாக வளர்ந்தது * கூகுளின் சூத்திரதாரிகள் யார்? * கார் கேரேஜில் ஆரம்பிக்கப்பட்டது ஏன்? * அந்தக் கார் கேரேஜை வாடகைக்குக் கொடுத்தவர் இன்று கூகுளின் உயரதிகாரிகளில் ஒருவர் என்பது உண்மையா? * ஆண்ட்ராய்டை (android) ஏன்
-
சிம்மாசனமற்ற மன்னர் குலம்
காலையிலேயே அனல்மழையென இறங்கும் வெயில், பத்தரை பன்னிரண்டு ராகுகாலம், வரப்போகிற சந்திராஷ்டமம் எல்லாவற்றையும் முன்னிட்டு, ஏழு மணிக்கே வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதெல்லாம் ஏட்டோடு போய்விடாமல் அர்த்தம் கொடுக்கிற நாள் என்பதால் வரிசை முழுக்க மகிழ்ச்சி. செல்ஃபோன் கொண்டு போகலாமா, ஆதார் செல்லுமா – சிறப்புக் கேள்விகள். வெகேஷன் வெளிநாடா, மாவடு கிடைத்ததா, வத்தல் போட்டாச்சா – சீசன் கேள்விகள். பொண்ணுக்கு விசேஷம் உண்டா, லிவின் கப்பிளையெல்லாம் கம்யூனிடில சேக்கலாமோ – நிரந்தரக்கேள்விகள். உரையாடலில்
-
ராஜதரிசனம்
வேதமந்திரங்களாலும், வாசனை திரவியங்களாலும், யுகம் யுகமாய் மலர்ந்த மலர்களாலும், முற்றிலும் தீர்க்கமான ஆசாரங்களாலும் மெருகேற்றப்பட்ட பேரதிர்வு கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் கருவறை போலிருந்தது அந்த இடத்தின் அதிர்வு. பன்னெடுங்காலத்திற்கு முன்பு முதன்முதலில் நுகர்ந்த காட்டு நிஷாகந்தியின் மணத்தை இன்றளவும் என்னால் மறு நினைவாக மீட்டெடுத்து அது இன்னவென்று சொல்லிவிடமுடியாத தத்தளிப்பு இருக்கிறது. அதே போன்ற ஒரு நறுமணம் அந்த இடத்தில் முற்றிலும் பல்கிப்பெருகியிருக்கிறது. ஏற்கனவே தயக்கத்தாலும், பேரார்வத்தாலும் நடுங்கியிருந்த மனது அந்த மோனநிலைக்கு
-
நீலகண்டம் – சிறுகதை
(அக்டோபர் 1 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளியானது) குன்னூருக்குச் செல்லும் பிரதானச்சாலையிலிருந்து விலகி, ஒரு ஒற்றையடிப்பாதையில் கார் சற்றே குலுங்கித் திரும்பியபோது தூக்கத்திலிருந்து விழித்தேன். மழைச்சாரல் நனைத்த ஒரு குறுகிய புற்பாதை அது. இருபுறமும் நெடிய மரங்கள் வளர்ந்து மழைக் குளுமையை இரட்டிப்பாக்கிக்கொண்டிருந்தன. ஸ்வெட்டர் போட்டிருந்தும் குளிர் தாக்கியது. சற்று நகர்ந்து டிரைவ் செய்துகொண்டிருந்த அவன் தோளில் சாய்ந்துகொண்டேன். ”மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே” என்று ஸ்பீக்கரில் வழிந்துகொண்டிருந்த பாடல், இயல்பாகவே அவன் நெருக்கத்தை வேண்டியது. சற்றுத்தள்ளி
-
JUBILEE
ஹிமான்ஷூ ராய், தேவிகா ராணி என்னும் தம்பதிகள் பாம்பே டாக்கீஸ் என்ற பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்றை 1930 களில் மும்பையில் நடத்திக்கொண்டிருந்தனர். 1935ம் வருடம் ஹிமான்ஷூ தயாரிப்பில், தேவிகா ராணி ஹீரோயினாகவும், புதுமுக நடிகரான நஜ்முல் ஹசனும் இணைந்து நடித்த ”ஜவானி கி ஹவா” (இளமைக்காற்று) என்ற திரைப்படம் சில்வர் ஜுப்ளி கண்டது. அத்தனை கூட்டமும் பேரழகியான தேவிகாவைப்பார்க்கத்தான் வந்தன என்றாலும், நஜ்முல் – தேவிகா ஜோடியின் செண்டிமெண்ட் காரணமாக ஹிமான்ஷூ அடுத்த படத்தையும் இவ்விருவரையும் வைத்தே
-
அக்கமாதேவியின் மல்லிகார்ஜூன தரிசனம்
பல நல்ல விஷயங்கள் மிகத் தாமதமாகத்தான் வந்து சேர்கின்றன. அப்படி வந்து சேர்ந்தனவற்றுள் ஒன்று இந்த வசனகவிதையும், பாடலும். பண்டிட் வெங்கடேஷின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தப்பாடலும் எழுந்துவந்தது . கன்னடத்தில் இருந்தாலும், ஒரு வசன கவிதை போல மிக நேர்த்தியாக இருந்தது. தேடிப்பார்த்தபோது அது அக்கமாதேவி எழுதியது என்று தெரிந்தது. அக்கமாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்துறவி – கவிஞர். ஸ்ரீசைலத்தில் கோவில் கொண்டுள்ள மல்லிகார்ஜூனர் எனும் சிவ வடிவை தன் கணவராகவே கருதி அவர் மீது
-
வாரணத்தேடல் – உபநயனக்காதை 1
எங்க வீட்டு விழாவை திட்டமிட்டு நடத்தினதுல ஏகப்பட்ட அனுபவங்கள். அதுல சுவாரசியமான ஒண்ணு இது. என் தங்கை திருமணம் ஸ்ரீரங்கத்துல நடந்தப்ப, அப்பா ஊர்வலத்துக்கு யானை வேணும்னு சொன்னாங்க. ஸ்ரீரங்கத்துல யானைகளுக்கு பஞ்சமில்ல. சில மணி நேரங்கள்ளயே ஒரு சிறுதொகைக்கு பேசி முடிவு பண்ணினோம். இப்ப அதே ஞாபகத்துல பையன் விழாவுக்கும் யானை கொண்டுவரலாம்னு சொல்லிட்டதால, கேட்டரர்கிட்டதான் முதல்ல பேசினேன். அவர் அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விழாவுக்கு கோவிடுக்கு முன்ன கொண்டு வந்ததாவும், 65000 ஆச்சுன்னும்
