• HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • September 17, 2025
      வாழ்க்கை

      அகப்பேய் அகவல்

      ஓடிவரும் மான்குட்டிகள் மூன்று, எந்தக் காரணமும் இன்றி திடீரென்று தண்ணீரில் குதிக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார் பரத்வாஜ் ரங்கன், அதிலேயே ‘இப்படித்தான் introverts சூப்பர் மார்க்கெட்டில் எதிரில் யாரேனும் வந்தால் சட்டெனப் பாதை மாறி ஒளிந்துகொள்வார்கள்’ என்ற குறிப்பையும் சேர்த்திருந்தார். சக இண்ட்ரோவெர்ட் நட்பு ஒருவர் அதனைப் பகிர்ந்திருந்தார். இருவரும் கண்களில் நீர் வரும் ஸ்மைலியைப் பகிர்ந்து சிரித்துக் கொண்டோம். உண்மையிலேயே இந்த அகக்கூட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் இச்சையைத் தவிர்க்க முடியாதவர்களின் இண்ட்ரோவெர்ட் உலகம் பிரத்தியேகமானது. நான்

      மேலும் வாசிக்க…


      • September 6, 2025
        எழுத்து, Uncategorized

        கண்ணுக்கெதிரே காளையைச் சந்தித்தல்

        எளிய கதைகளை எழுதுவதை விட, கிளாசிக்குகளை, உங்கள் மொழியை, சிந்தனையைச் சவாலுக்கு உட்படுத்துகிற கதைகளை எழுதுங்கள் என்கிறார் சல்மான் ருஷ்டி. இதனை ‘Work Close to the Bull’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பகுதியாகத் தன்னுடைய மாஸ்டர் க்ளாஸில் சொல்லிக்கொடுப்பார். காளைச்சண்டையை மேடையிலிருந்து காண்பதை விட, களத்தில் இறங்கிச் சவாலைச் சந்தித்துப்பார் என்பது உட்பொருள். வெளிவரவிருக்கும் என்னுடைய புதிய fantasy fiction நாவல் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிரியரிடம் முதன்முறையாக விவரிக்கச்சென்றேன். கிட்டத்தட்ட இருபது

        மேலும் வாசிக்க…


        • September 1, 2025
          Uncategorized

          மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்

          [திரு. ஜெயக்குமார் பரத்வாஜ் வெள்ளிமலையில் நடத்திய ஆலயக்கலை வகுப்பு பற்றிய கட்டுரை] தடுத்தாட்கொண்ட நாதர் மீதான சுந்தரர் தேவாரத்தோடு திரு. ஜெயக்குமார் இந்த ஆலயக்கலை வகுப்பை ஆரம்பித்தார். பித்தா பெருமானே என அவர் குரலுயர்ந்த அந்தத் தருணம், பலவிதங்களில் அலைந்து கொண்டிருந்த சிந்தனையையும், மனத்தையும் தடுத்தாட்கொண்டது. அடுத்த மூன்று நாள்களும் எங்களை அறிவால், பக்தியால். பாரம்பரியப் பெருமைகளால், ஆலயக்கோட்பாடுகளால், சிற்ப மரபால், இசையால், நகைச்சுவையால் மற்ற எந்த உலகாதீயக் கோட்பாடுகளுக்கும் கவனம் கொண்டு செல்லாமல் ஆட்கொண்டிருந்தார். ஓர்

          மேலும் வாசிக்க…


          • August 22, 2025
            Uncategorized

            மழை – ஓர் ஓவியம், ஒரு சினிமாக்காட்சி, ஒரு கவிதை

            மழை வரும் முஸ்தீபுகள் தெரிந்ததால், இன்று அதிகாலையிலேயே நடையைத் தொடங்கினேன். ஒரு சுற்று நிறைவதற்குள்ளாகவே வலித்துப் பெருகிப் பொழிந்தது. உடனே வீட்டிற்குச் சென்றுவிடாமல் மழை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். சென்ற வாரம் உயர்நீதிமன்றச்சாலையில் பூந்தூவலாய்ப் பொழிந்த தூறலில் மகிழ்வோடு நனைந்தது. சென்ற மாதம் மலையேற்றம் சென்றபோது போர்த்திமந்து அணையின் மேல் ஒதுங்க இடமின்றிக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மழையில் நனைந்தபடியே நடந்த நினைவு . அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் பழனி மலை அடிவாரத்தில் காவியணிந்த

            மேலும் வாசிக்க…


            • August 21, 2025
              எழுத்து

              வாக்கு, க்ளாக்கு, தாக்கு

              எழுத்தாளர் டான் பிரவுனின் (Dan Brown) மாஸ்டர் கிளாஸ் வகுப்பில் சில வருடங்களுக்கு முன்பு இணைந்து கற்றிருக்கிறேன். அதில் ஒரு திரில்லர் நாவல் எழுதுவதற்கான பல சுவாரசியமான தகவல்களையும், நுட்பங்களையும் பகிர்ந்திருந்தார். அதில் நெடுநாள்கள் மனத்தில் நிற்பது இந்த 3C கோட்பாடு. ஒரு வாசகனை நாவலுக்குள் இழுத்து வைத்துக்கொண்டு அவன் திருப்திக்கு விருந்து வைப்பதில் இந்த மூன்று C க்களுக்கும் மிக முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்கிறார். என்பது அவர் சொன்ன மூன்று விஷயங்கள். இதனை எளிமைப்படுத்தி

              மேலும் வாசிக்க…


              • August 19, 2025
                எழுத்து

                எழுதிப்படித்தல்

                இன்று அதிகாலையில் நான் எழுதிப் படிப்பதாகப் போட்டிருந்த ஒரு வீடியோவைச் சுட்டி என் பள்ளி நண்பர் ஒருவர் ’இன்னும் பேனா பேப்பர்லாம் வச்சு எழுதுறியா? என்று கேட்டிருந்தார். கூடவே,. அப்படி என்னதான் எழுதுவ? எதுக்கு அவ்ளோ நோட். ஏன் இவ்ளோ கலர்ல பேனா? என்றும் துணைக்கேள்விகளை அடுக்கியிருந்தார். எனக்கு அடிப்படையிலேயே எழுதிப்படிக்கும் பழக்கம் பள்ளி நாள்களிலிருந்தே உண்டு. படிப்பதை விட, எழுதினால் மனதில் பதிகிறது என்பதுதான் முதன்மைக் காரணம். அது பின்னாளில் ஆய்வுப்புத்தங்கள், தத்துவப் புத்தகங்களை வாசிக்கும்போதும்

                மேலும் வாசிக்க…


                • August 11, 2025
                  பறவை, வாசிப்பு, வாழ்க்கை

                  வானம் பார்த்த பாரத்வாஜம்

                  வானம் பார்த்து தியானம் செய்யும் இந்தக் கரிச்சான் குருவியைக் கண்டவுடன் தி.ஜானகிராமன் நினைவு வந்து நிதானிக்கிறேன். எப்போதும் மனிதர்கள் பார்க்கிறார்கள் என்ற உணர்வு வந்தாலே பறந்துவிடக்கூடிய பறவை இன்று இத்தனை அருகில் இருந்தும் எழாமல் எங்கோ கவனம் குவித்திருக்கிறது. பார்த்துக்கொண்டே நிற்கிறேன். பட்டுக்கருப்பு, மாம்பூவைத் தின்று கம்மல் குரலில் பாடும் குயில், பிச்சமூர்த்தி, ஆனைச்சாத்தன், ஆண்டாள், பாலுமகேந்திரா, அர்ச்சனா, கு.ப.ரா என்று நினைவுகள் கோத்துக்கோத்து உச்சம் போகும்போது, சட்டென்று குரலெழுப்பிக் கூவியது. ‘நல்ல இருட்டில் வெளிச்சத்தினாலே கோடு

                  மேலும் வாசிக்க…


                  • August 1, 2025
                    எழுத்து, புத்தகம்

                    அமியின் ஜெமினி

                    நான் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்தவன். ஆகவே காடு புகுதல் என்பது தினசரிச் செய்கையாக இருந்தது. அப்போதெல்லாம் சிந்தனை மொத்தத்தையும் விழிகளில், செவிகளில் கொண்டு குவிப்பதற்குப் பயிற்சியளித்திருப்பார்கள். ஏனெனில் திடீரென ஒரு முயல் கடக்கும். சட்டென ஒரு மான் தாவி ஓடும். புலி பாயலாம். கரடி தாக்கலாம். அது வரை பார்த்திராத ஒரு வண்ணப்பறவை பறந்து போகும். இது போன்ற சந்தோஷங்களும், அதிர்ச்சிகளும்தான் வனம் புகுதலின் ஆதாரமே . ஆகவே மொத்தக் கவனத்தையும் விழியில் கொண்டு குவிப்பது

                    மேலும் வாசிக்க…


                    • July 23, 2025
                      குந்தா, நீலகிரி

                      டைனோசர் காலத்துத் தவளை

                      வருடம் முழுதும் நீருக்குள் வாழும். எங்கோ வெகு தொலைவில், மனிதர் அறியாத ஆழத்தில், எளிதில் கண்டறிந்துவிட முடியாத மர்மக்கூட்டில் வசிக்கும். தென்மேற்கு பருவமழைக்காலம் வரும்போது சில மணி நேரங்கள் மட்டும் வெளியே வந்து மழையை ரசித்து அனுபவித்துவிட்டு மீண்டும் உள்நுழைந்து புகுந்து கொள்ளும். தவளையின் சாயலும் குரலும். நத்தையளவு உடலும் கொண்டு மீச்சிறு உருவமாய் ஊர்ந்து வரும் இது bhupathi’s purple frog என்று அழைக்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் காணக்கிடைக்கும். அது அனுமதித்தால் மட்டும்

                      மேலும் வாசிக்க…


                      • July 20, 2025
                        எழுத்து, குறுங்கதை

                        மனப்புள்ளிக்கோலம்

                        இந்தக்குகை இன்னும் எத்தனை நீளம் என்று தெரியவில்லை. வாழ்நாள் மொத்தமும் இந்த இருட்டிலேயே கடக்கவேண்டுமோ என்ற பயம் வந்தது. எங்கேயோ நீர்ப்பூச்சிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. புகை வாசனையும், பச்சை நாற்றமும் கலந்து வீசின. அது இன்னும் அதிகரித்தால் சுவாசம் அடைக்குமோ என்ற அச்சமும் வந்தது. அப்போதுதான் அந்தப் புள்ளிகளைக் கண்டேன். பாலே நடன மங்கைகள் போலச் சுழன்று சுழன்று ஆடித்திரிந்து எதிரில் வந்துகொண்டிருந்தன. நிறங்களைப் பற்றிச் சிந்திக்க மனதுக்கு வலுவில்லை. வெண்மையாகவோ, சாம்பல் நிறத்திலோ இருப்பதாக

                        மேலும் வாசிக்க…


                      ←Previous Page
                      1 2 3 4 … 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar