Category: general
-
சிம்மாசனமற்ற மன்னர் குலம்
காலையிலேயே அனல்மழையென இறங்கும் வெயில், பத்தரை பன்னிரண்டு ராகுகாலம், வரப்போகிற சந்திராஷ்டமம் எல்லாவற்றையும் முன்னிட்டு, ஏழு மணிக்கே வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதெல்லாம் ஏட்டோடு போய்விடாமல் அர்த்தம் கொடுக்கிற நாள் என்பதால் வரிசை முழுக்க மகிழ்ச்சி. செல்ஃபோன் கொண்டு போகலாமா, ஆதார் செல்லுமா – சிறப்புக் கேள்விகள். வெகேஷன் வெளிநாடா, மாவடு கிடைத்ததா, வத்தல் போட்டாச்சா – சீசன் கேள்விகள். பொண்ணுக்கு விசேஷம் உண்டா, லிவின் கப்பிளையெல்லாம் கம்யூனிடில சேக்கலாமோ – நிரந்தரக்கேள்விகள். உரையாடலில்…
-
Dreams & Questions
உங்கள் கனவுகளில் celebrities யாரேனும் வருவதுண்டா? எப்போதாவது அல்ல எப்போதுமே. எனக்கு இந்த syndrome இருக்கிறது கல்லூரி நாட்களிலிருந்தே. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறையேனும் நான் தமிழ்நாட்டு VIP களை கனவில் சந்தித்துவிடுகிறேன்.
-
Happy New Year
நேரமின்மையோ, வேலைகளின் அழுத்தங்களோ, மன உளைச்சல்களோ இன்னும் இன்னபிற தீவிர அன்றாட நாட்களின் அழுத்தங்களை கூட்டும் செய்கைகளோ என்னை தொடர்ந்து வலைப்பதிவு செய்யவிடாது குவிந்துவிடுகின்றன. அவ்வப்போது எழுதும் பதிவுகளும் பெரும்பாலும் சினிமா விமர்சனங்களாகவே அமைந்துவிடுகின்றன. இந்த வருடம் இதனிலிருந்து விடுபட்டு ஓரளவிற்கேனும் வலைப்பதிவு எழுத்துக்களில் நாட்டம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. தொடர்ந்து தீவிரம் காட்ட எண்ணியிருக்கிறேன். எல்லாம் வல்ல இறை துணை செய்ய வேண்டும் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!
-
Guess the Google
(Bala வழியாக) Guess the Google என்கிற கூகிள் புகைப்படத் தேடல் தொடர்பான விளையாட்டு – http://grant.robinson.name/projects/guess-the-google/
-
புதிய வார்ப்பு
ஒரு நீண்ட பயணத்தின் வாயிலாக கிடைத்த வாசனைகளும், வார்ப்புகளும், வசவுகளும் மற்றும் சில வாழ்க்கை குறிப்புகளும்…
