Category: மனவெழுச்சி
-
யக்ஷிகளை எழுப்புதல்
கடந்த வாரயிறுதியில் Vasteras தமிழ்ச் சங்கத்திற்காகப் புனைவெழுத்து பற்றிய சிறிய உரையாற்றியிருந்தேன். அதில் மொழி, கட்டமைப்பு, கற்பனை என்னும் மூன்று முக்கியக்கூறுகளைப் பற்றி விளக்கினேன். தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு சாதாரணன் செல்வது வேறு. அதன் வரலாறு, தொன்மம், சிற்பம், தத்துவம், கட்டடக்கலை ஆகியவற்றை அறிந்து செல்பவன் வேறு. இவை யாவையும் அறிந்த பின்னர் அதன் மீது தன் கற்பனையை ஏற்றி அனுபவிப்பவன் வேறு என்று ஓர் உதாரணம் கொண்டு கற்பனையைப் பற்றி விளக்கினேன். இந்த உரையைக்…
-
தவப்பத்து
எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகம் எனக்கு ஒரு புனித நூல். அகராதிக்கு அடுத்தபடியாக என் மேசையில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இரண்டாவது புத்தகம் அது. அதன் ஒவ்வொரு சொல்லையும் கிட்டத்தட்ட மனப்பாடம் செய்திருக்கிறேன். அதில்தான் இந்தத் தவப்பத்து வருகிறது. இது ஆசிரியர் கொடுத்த தலைப்பல்ல. நான் எனக்காக வைத்துக்கொண்டது. இது புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயமான ஜென் ராஜா வில் வருகிற ஆரம்பப் பத்திகள். (அதற்குப் பிறகு அந்த அத்தியாயம் பேசும் இன்னொரு உன்னதம் இருக்கிறது. அதைத் தவறவிடாதீர்கள்) இந்தப் பத்தும்…
-
தேவதைகள் தரும் ரோஜாக்கொத்து
நேற்று வாசக நண்பர் சுரேஷ் அமாசி மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதன் கடைசி வரியைப் படித்து நெடு நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். (உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தினம் தினம் ஏதாச்சும் தேவதை வந்து ரோசாப்பூ கொடுத்து எழுப்புதா). நிதர்சனம் என்னவென்றால், இன்றைய தேதியில் பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் எல்லோரையும் ,காலைப்பொழுதை வெறுப்பவர்களாகத்தான் மாற்றி வைத்திருக்கிறது காலம். என் வேலை நேரம் அமெரிக்க நேரம் சார்ந்தது (EST). பெரும்பாலும் என் நாள் நள்ளிரவில் / அதிகாலையில்தான் நிறைவுறும். பணி நேரம்…
-
விழி, எழு, ஓடு
விழி, எழு, ஓடு என்பதுதான் மானுடம் கண்ட மூன்று மகத்தான வார்த்தைகள் என நம்புகிறேன். நம் அன்றாடங்களில் குழப்பங்களுக்கும், வினாக்களுக்கும், தோற்ற மயக்கங்களுக்கும், துன்பங்களுக்கும் குறைவேதுமில்லாத இடமுண்டு. இவை அனைத்துமே நம்மை வீழ்த்தக் காத்திருக்கும் சிற்றரக்கர்கள். உட்கார், உறங்கு, போதும், இன்னும் சிறிது நேரம் அலைப்பேசி பார் என்று சிற்றின்பங்களில் தள்ளிவிடும் இனிப்புக்கரங்கள் கொண்ட அவுணன். இப்படிப்பட்ட தருணங்களிலெல்லாம், விழு, எழு, ஓடு என்ற மூன்றோடு அலைந்து திரி என்ற நான்காவதாக ஒன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். இது தீர்வுக்கான…
