Category: இசை
-
ராஜதரிசனம்
வேதமந்திரங்களாலும், வாசனை திரவியங்களாலும், யுகம் யுகமாய் மலர்ந்த மலர்களாலும், முற்றிலும் தீர்க்கமான ஆசாரங்களாலும் மெருகேற்றப்பட்ட பேரதிர்வு கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் கருவறை போலிருந்தது அந்த இடத்தின் அதிர்வு. பன்னெடுங்காலத்திற்கு முன்பு முதன்முதலில் நுகர்ந்த காட்டு நிஷாகந்தியின் மணத்தை இன்றளவும் என்னால் மறு நினைவாக மீட்டெடுத்து அது இன்னவென்று சொல்லிவிடமுடியாத தத்தளிப்பு இருக்கிறது. அதே போன்ற ஒரு நறுமணம் அந்த இடத்தில் முற்றிலும் பல்கிப்பெருகியிருக்கிறது. ஏற்கனவே தயக்கத்தாலும், பேரார்வத்தாலும் நடுங்கியிருந்த மனது அந்த மோனநிலைக்கு…
-
அக்கமாதேவியின் மல்லிகார்ஜூன தரிசனம்
பல நல்ல விஷயங்கள் மிகத் தாமதமாகத்தான் வந்து சேர்கின்றன. அப்படி வந்து சேர்ந்தனவற்றுள் ஒன்று இந்த வசனகவிதையும், பாடலும். பண்டிட் வெங்கடேஷின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தப்பாடலும் எழுந்துவந்தது . கன்னடத்தில் இருந்தாலும், ஒரு வசன கவிதை போல மிக நேர்த்தியாக இருந்தது. தேடிப்பார்த்தபோது அது அக்கமாதேவி எழுதியது என்று தெரிந்தது. அக்கமாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்துறவி – கவிஞர். ஸ்ரீசைலத்தில் கோவில் கொண்டுள்ள மல்லிகார்ஜூனர் எனும் சிவ வடிவை தன் கணவராகவே கருதி அவர் மீது…
-
தமிழ்த்திரைப்பாடல்கள் – 2009
இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்குமார் ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன. தாய் தின்ற மண்ணே –ஆயிரத்தில் ஒருவன் – விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் – வைரமுத்து,…
-
சில இசைக்குறிப்புகள்
கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு கிராமஃபோன் நிகழ்ச்சியை கேட்டேன். முன்பு போலில்லாது அமைதியான இரவை கிழித்துத்துவைக்கும் வண்ணம் விளம்பரதாரர்களின் இரைச்சல் அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஷாலுவின் குரல் என்னதான் குழைந்து கூப்பாடு போட்டாலும் ஒரு பாடலுக்கு ஒரு முறை இடையே வந்து ஒலிக்கும் ஜோய் ஆலுக்காஸின் ஆக்ரமணம்தான் அதிகம். பேசாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட நினைவுகளோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ என்னவோ? ஜேம்ஸ் இசையமைக்க வந்தபோது அவரின் பழைய ஆல்பம் பாடல்களில் ’தேவாலய இசை’ மிகுந்திருப்பதாக…
-
kundrakkudi :(
குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு செய்தி பெரும் துயர் அளித்தது. இடைவிடாமல் ஒரு நாள் முழுதும் குன்னக்குடி இசை கேட்டுக்கொண்டிருந்த காலங்கள் என் வாழ்வில் உண்டு. முதன் முதலாக கர்நாடக இசை ராகங்கள் கண்டு பிடிக்கும் விளையாட்டை குன்னக்குடியிடமிருந்துதான் தொடங்கியிருந்தேன். அவரும் வலையப்பட்டியும் இணைந்து ஆற்றிய கச்சேரிதான் எனக்கு எப்போதுமே ஆதர்சம். அவரின் ஹம்சகீதே என்ற தொகுப்பில் இருக்கும் ஹீமகிரி தனையே என் வாழ்வின் பெரும் துயர் மிகுந்த தருணம் ஒன்றில் பெரும் துணையாக இருந்து இக்கட்டான ஒரு முடிவெடுக்கும்…
-
Welldone James!
ஜேம்ஸ் வசந்தன் ஒரு சிறந்த கிதார் இசைக்கலைஞர் என்பதை அறிந்திருந்தேன். நல்ல சங்கீத ஞானமும் கொண்டவர். முதலில் அவர் வெளியிட்ட “வாசனை” என்கிற இசைத்தொகுப்பு (அதிகமான மேற்கத்திய வாசனை வீசியது!) பரவலான வரவேற்பு பெறாமல் போய்விட்டது. திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதே பழைய வாசனை வீசக்கூடாதே என்ற எண்ணம் இருந்து வந்தது. எண்ணத்திற்கு மாறாக வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்பட இசையமைப்பு குறுவட்டான “சுப்ரமணியபுரம்” சிறந்த பாடல்களை கொண்டிருக்கிறது. “கண்கள் இரண்டால்” என்று…
-
…Sung by JJ
1999 ம் வருடம் சிமிகேர்வலின் பேட்டி ஒன்றின்போது (Rendezvous with simi garewell) ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிந்தி பாடலை பாடகேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது அவரது குரல் ஏனோ என்னை ஈர்க்கவில்லை. அண்மைய நாட்களில் அடிமைப்பெண் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவரது குரலில் ஒலித்த “அம்மா என்றால் அன்பு” (இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன்..) என்னை மிகவும் கவர்ந்தது. . பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் ஏன் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து பாடவில்லை என்ற விபரம் தெரியவில்லை.
-
இசைமுத்துக்கள் மூன்று
1. Tera Mera Milna திரைப்படம் : ஆப் கா சுரூர் (Aap ka suroor) இசை : ஹிமேஷ் ரேஷமிய்யா குரல்கள் : ஹிமேஷ் ரேஷமிய்யா ,ஷ்ரேயா அட ஹிமேஷ் ரேஷமிய்யா குரலிலும் ஒரு அருமையான மெலோடி -அதுவும் ஷ்ரேயா கோஷல் மெலடி பாடுகிறார் என்றால் கேட்கவா வேண்டும். சர்க்கரை பந்தலில் தேன்மாரி. hats off ஷ்ரேயா கோஷல் . தான் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் பார்த்து பார்த்து பாடல்கள் போட்டிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. கேளுங்கள் இங்கே
-
பலே!
முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.
-
Jhoom barabar jhoom
1.KK, சுக்விந்தர் சிங், மஹாலக்ஷ்மி ஐயர் கூட்டணி இப்படி வொர்க் அவுட் ஆகும் என்று கணித்த இசையமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய ஓ! Hats off SEL! 2. இதனை அடிக்கடி ஒளிபரப்பி எரிச்சலடைய செய்யாத radio 4 kku நன்றிகள். 3. எல்லா நல்ல பாட்டுகளையும் விட்டுவிட்டு ஹிமேஷ் ரேஷமிய்யாவையும் மட்டும் தலையில் வைத்துக்கொண்டு ஆடும் வட இந்தியா மீடியாவை பசித்த சிங்கம் உண்ணட்டும். (நன்றி தலைவர்) JHOOM BARABAR JHOO…
