குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு செய்தி பெரும் துயர் அளித்தது. இடைவிடாமல் ஒரு நாள் முழுதும் குன்னக்குடி இசை கேட்டுக்கொண்டிருந்த காலங்கள் என் வாழ்வில் உண்டு. முதன் முதலாக கர்நாடக இசை ராகங்கள் கண்டு பிடிக்கும் விளையாட்டை குன்னக்குடியிடமிருந்துதான் தொடங்கியிருந்தேன். அவரும் வலையப்பட்டியும் இணைந்து ஆற்றிய கச்சேரிதான் எனக்கு எப்போதுமே ஆதர்சம். அவரின் ஹம்சகீதே என்ற தொகுப்பில் இருக்கும் ஹீமகிரி தனையே என் வாழ்வின் பெரும் துயர் மிகுந்த தருணம் ஒன்றில் பெரும் துணையாக இருந்து இக்கட்டான ஒரு முடிவெடுக்கும் பாவனையில் இருந்த என்னை பிடித்து இழுத்து வந்து வெளிச்சத்துக்கு நிறுத்தியது.
துயர செய்தி கேட்டவுடன் கோர்வையாக வந்து போன நினைவுகளை எழுதுவது கூட சுமையாயிற்று. அவரின் ஆன்மா சாந்தி அடைய எனது மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.

Leave a comment