Month: February 2026
-
நீலமலை ரகசியம் – நிறைவு
மெட்ராஸ் பேப்பரில் தொடராக எழுதி வந்த ‘நீலமலை ரகசியம்’ இன்றோடு (பிப்ரவரி 10, 2026) நிறைவுபெறுகிறது. நீலகிரியின் வரலாற்றை ஐந்து வயதிலிருந்து கதைகளாகக் கேட்கத் தொடங்கினேன். படுகஹள்ளியிலிருந்து, துருக்க மகாராஜாவால் விரட்டப்பட்டு ஹெத்தையம்மன் நீலகிரிக்கு நுழைந்த கதையைச் சொல்லித் தூங்க வைத்திருக்கிறார்கள். பவர் ஹவுஸுக்குச் செல்லும்போது எப்படி ஐந்து மின் நிலையங்களும் ஆழ் வெளியைத் தாண்டி, மலைகளைக் குடைந்து, ஆறுகளை மடைமாற்றி உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று வரைபடம் காட்டி விளக்குவார்கள். அதனைச் சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் ஆரம்பம் ஒரே ஒரு…
