Month: November 2025
-
ஆற்றொழுக்கும் பகடையாட்டமும்
நேற்று எங்கள் bukpet எழுத்தாளர் குழுவில் புதிதாகச் சிறுகதை எழுதத் தொடங்கியிருக்கும் ஒருவர், எழுதுவதில் தனக்குள்ள குழப்பங்களைப் பகிர்ந்துகொண்டபோது கீழ்க்கண்டதில் முதலிரண்டு விஷயங்களை அவருக்குச் சொன்னேன். அதை இன்னும் நீட்டித்து, இன்னும் மூன்று முக்கிய விஷயங்களைத் தொகுத்து எனக்காக எழுதி வைத்துக்கொண்டேன்.
-
யக்ஷிகளை எழுப்புதல்
கடந்த வாரயிறுதியில் Vasteras தமிழ்ச் சங்கத்திற்காகப் புனைவெழுத்து பற்றிய சிறிய உரையாற்றியிருந்தேன். அதில் மொழி, கட்டமைப்பு, கற்பனை என்னும் மூன்று முக்கியக்கூறுகளைப் பற்றி விளக்கினேன். தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு சாதாரணன் செல்வது வேறு. அதன் வரலாறு, தொன்மம், சிற்பம், தத்துவம், கட்டடக்கலை ஆகியவற்றை அறிந்து செல்பவன் வேறு. இவை யாவையும் அறிந்த பின்னர் அதன் மீது தன் கற்பனையை ஏற்றி அனுபவிப்பவன் வேறு என்று ஓர் உதாரணம் கொண்டு கற்பனையைப் பற்றி விளக்கினேன். இந்த உரையைக்…
-
புனைவு: வாசிப்பும் எழுத்தும் – ஓர் உரை
ஸ்வீடன் நாட்டின் வேஸ்தரஸ் (Västerås) நகர தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக நேற்று மாலை ‘புனைவு: வாசிப்பும், எழுத்தும்’ என்ற தலைப்பில் ஓர் உரையாற்றினேன். புனைந்து சொல்லப்படும் கதைகளின் மீது நம் ஆர்வம் எங்கிருந்து உருவாகி வளர்கிறது? வாசிப்பின் மீதான நம் ஆளுமையை விரிவாக்கிக் கொள்வது எப்படி? காட்சி ஊடகங்களின் பாதிப்பிலிருந்து மீண்டு, சொற்களின் உலகில் புகுந்து மகிழ்வது எப்படி? இதுவரை வாசிப்புப் பக்கமே ஒதுங்காதவர்கள் எங்கிருந்து தொடங்கலாம்? எழுதுவதற்கான அடிப்படைகள் என்ன? எப்படி ஒரு கதையை வாசகன் ரசிக்கும்…
-
தவப்பத்து
எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகம் எனக்கு ஒரு புனித நூல். அகராதிக்கு அடுத்தபடியாக என் மேசையில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இரண்டாவது புத்தகம் அது. அதன் ஒவ்வொரு சொல்லையும் கிட்டத்தட்ட மனப்பாடம் செய்திருக்கிறேன். அதில்தான் இந்தத் தவப்பத்து வருகிறது. இது ஆசிரியர் கொடுத்த தலைப்பல்ல. நான் எனக்காக வைத்துக்கொண்டது. இது புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயமான ஜென் ராஜா வில் வருகிற ஆரம்பப் பத்திகள். (அதற்குப் பிறகு அந்த அத்தியாயம் பேசும் இன்னொரு உன்னதம் இருக்கிறது. அதைத் தவறவிடாதீர்கள்) இந்தப் பத்தும்…
