டைனோசர் காலத்துத் தவளை

வருடம் முழுதும் நீருக்குள் வாழும். எங்கோ வெகு தொலைவில், மனிதர் அறியாத ஆழத்தில், எளிதில் கண்டறிந்துவிட முடியாத மர்மக்கூட்டில் வசிக்கும். தென்மேற்கு பருவமழைக்காலம் வரும்போது சில மணி நேரங்கள் மட்டும் வெளியே வந்து மழையை ரசித்து அனுபவித்துவிட்டு மீண்டும் உள்நுழைந்து புகுந்து கொள்ளும்.

தவளையின் சாயலும் குரலும். நத்தையளவு உடலும் கொண்டு மீச்சிறு உருவமாய் ஊர்ந்து வரும் இது bhupathi’s purple frog என்று அழைக்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் காணக்கிடைக்கும். அது அனுமதித்தால் மட்டும் .

டினோசரஸின் காலம் தொட்டு நீண்டகாலம் வாழும் ஒரே உயிரினமாக விலங்கியலாளர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.

பூபதி என்னும் முன்னொட்டு, ஊர்வனவியல் வல்லுநரான சுப்ரமணியம் பூபதி அவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது. பூமியின் மதிப்புமிக்க மறைபொருள்களில் ஒன்று. சென்ற வாரம் பருவமழையின்போது மேற்கு நீலகிரியில் தலைகாட்டியிருக்கிறது.

Leave a comment