Month: July 2025
-
டைனோசர் காலத்துத் தவளை
வருடம் முழுதும் நீருக்குள் வாழும். எங்கோ வெகு தொலைவில், மனிதர் அறியாத ஆழத்தில், எளிதில் கண்டறிந்துவிட முடியாத மர்மக்கூட்டில் வசிக்கும். தென்மேற்கு பருவமழைக்காலம் வரும்போது சில மணி நேரங்கள் மட்டும் வெளியே வந்து மழையை ரசித்து அனுபவித்துவிட்டு மீண்டும் உள்நுழைந்து புகுந்து கொள்ளும். தவளையின் சாயலும் குரலும். நத்தையளவு உடலும் கொண்டு மீச்சிறு உருவமாய் ஊர்ந்து வரும் இது bhupathi’s purple frog என்று அழைக்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் காணக்கிடைக்கும். அது அனுமதித்தால் மட்டும்…
-
மனப்புள்ளிக்கோலம்
இந்தக்குகை இன்னும் எத்தனை நீளம் என்று தெரியவில்லை. வாழ்நாள் மொத்தமும் இந்த இருட்டிலேயே கடக்கவேண்டுமோ என்ற பயம் வந்தது. எங்கேயோ நீர்ப்பூச்சிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. புகை வாசனையும், பச்சை நாற்றமும் கலந்து வீசின. அது இன்னும் அதிகரித்தால் சுவாசம் அடைக்குமோ என்ற அச்சமும் வந்தது. அப்போதுதான் அந்தப் புள்ளிகளைக் கண்டேன். பாலே நடன மங்கைகள் போலச் சுழன்று சுழன்று ஆடித்திரிந்து எதிரில் வந்துகொண்டிருந்தன. நிறங்களைப் பற்றிச் சிந்திக்க மனதுக்கு வலுவில்லை. வெண்மையாகவோ, சாம்பல் நிறத்திலோ இருப்பதாக…
-
சான் அகாடமி பள்ளியில் உரை
இன்று தாம்பரம் சான் அகாடமி பள்ளியில் reading for development என்னும் தலைப்பில் ஓர் உரையாற்ற அழைத்திருந்தார்கள். பாடப் புத்தகங்கள் தாண்டி, மாணவர்களுக்கு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவது, அதன் தேவையை அவர்களுக்குப் புரியவைப்பது, அதனால் ஏற்படும் நீண்ட காலப்பயன்கள் பற்றி விளக்கமாகச் சொல்வது என்பது ஏற்பாடு. இதனை முழுக்க என்னுடைய பேச்சு, ப்ரசண்டேஷனாக மட்டும் இல்லாமல் எல்லோரும் பங்குபெறும் இயல்பான கலந்துரையாடலாக மாற்றி அமைத்துக்கொண்டு உரையாடினேன். கிட்டத்தட்ட ஐம்பது சதவீதக் குழந்தைகள் ஏற்கனவே பள்ளிப்பாடம் தாண்டிய வாசிப்புக்கு…
