* கூகுள் என்ற சொல்லுக்குப் பொருள் உள்ளதா?
* ‘இணையத்தில் தேடு` என்ற பதத்தைக் ‘கூகுள் செய்’ என்றே மாற்றியமைத்தது காலமா? அல்லது கார்ப்பரேட் தந்திரமா?
* கல்லூரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட கூகுள் தேடுபொறி எப்படி இத்தனை பெரிய நிறுவனமாக வளர்ந்தது
* கூகுளின் சூத்திரதாரிகள் யார்?
* கார் கேரேஜில் ஆரம்பிக்கப்பட்டது ஏன்?
* அந்தக் கார் கேரேஜை வாடகைக்குக் கொடுத்தவர் இன்று கூகுளின் உயரதிகாரிகளில் ஒருவர் என்பது உண்மையா?
* ஆண்ட்ராய்டை (android) ஏன் கூகுள் வாங்கியது?
* இன்று ஏன் அது தவிர்க்க முடியாத கைப்பேசி ஆப்பரேடிங் சிஸ்டமாக இருக்கிறது?
* கூகுள் உண்மையிலேயே நம்மைக் கண்காணிக்கிறதா? நம் தரவுகளைத் திருடுகிறதா?
* தன்னை மோனோபாலியாக – தனித்த ஒருவனாக நிறுத்திக்கொள்வதில் ஆர்வமும், அதிகாரமும் செலுத்துகிறதா?
* கூகுள் மேப்ஸ் ஏன் சிலசமயம் வழிமாறிக் கூட்டிச் சென்றுவிடுகிறது?
* தனக்கு எதிரான வழக்குகளை எப்படிக் கூகுள் எதிர்கொள்கிறது?
* செயற்கை நுண்ணறிவுத் துறையில் ChatGPT யை கூகுளால் விஞ்சமுடியவில்லையா?
* அடுத்தடுத்து என்ன துறைகளில், என்னென்ன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறது?
மேற்கண்ட ஆதாரக் கேள்விகளுக்கு மட்டுமல்ல. கூகுள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்த வருட இறுதி வரை நிகழ்ந்த எல்லா முக்கிய விஷயங்களையும் அலசுகிறது ‘G இன்றி அமையாது உலகு` புத்தகம்.
அந்நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று உச்சாணிக்கொம்பில் அமர்ந்து கொண்டிருக்கும் தருணம் வரை படிப்படியாக அதன் வளர்ச்சியைக் கண்முன் கொண்டு வருகிறது.
சென்னைப் புத்தகக் கண்காட்சி ஸீரோ டிகிரி அரங்கில் (540-541) கிடைக்கிறது. வருக!


Leave a comment