Month: May 2024
-
சிம்மாசனமற்ற மன்னர் குலம்
காலையிலேயே அனல்மழையென இறங்கும் வெயில், பத்தரை பன்னிரண்டு ராகுகாலம், வரப்போகிற சந்திராஷ்டமம் எல்லாவற்றையும் முன்னிட்டு, ஏழு மணிக்கே வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதெல்லாம் ஏட்டோடு போய்விடாமல் அர்த்தம் கொடுக்கிற நாள் என்பதால் வரிசை முழுக்க மகிழ்ச்சி. செல்ஃபோன் கொண்டு போகலாமா, ஆதார் செல்லுமா – சிறப்புக் கேள்விகள். வெகேஷன் வெளிநாடா, மாவடு கிடைத்ததா, வத்தல் போட்டாச்சா – சீசன் கேள்விகள். பொண்ணுக்கு விசேஷம் உண்டா, லிவின் கப்பிளையெல்லாம் கம்யூனிடில சேக்கலாமோ – நிரந்தரக்கேள்விகள். உரையாடலில்…
