-
மோகமுள் – நாவல்
”மோகமுள்” நாவலை முதன்முதலில் கல்லூரிக்காலத்தில்தான் படித்திருந்தேன். முழுமையாக படித்திருக்கிறேன்தான். ஆனால் அந்த அனுபவத்தை முழுதும் உள்வாங்கவில்லை என்று இரண்டாவது முறை முழுமையான வாசிப்புக்குப்பிறகு இப்போது உணர்ந்தேன். ஏற்கனவே படித்திருந்தாலும், சொந்தமாக என்னிடம் மோகமுள் புத்தகம் இல்லை என்ற காரணத்தினாலேயே 2015ல் காலச்சுவடு கிளாசிக் பதிப்பித்த புதிய பதிப்பை வாங்கி வைத்திருந்தேன். அவ்வப்போது கும்பகோணம் போர்ஷன்கள், தங்கம்மாவின் கதை, காவிரி வர்ணனைகள் என்று படித்துக்கொண்டிருந்தாலும் (2019) ஜனவரி 1ம் தேதி ஆரம்பித்து 8ம்தேதி வரை நாளொன்றுக்கு 60 பக்கம்
-
Scoop by Kuldeep Nayar
ஸ்கூப் ( Scoop) இந்தியாவின் மிக மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவரான குல்தீப் நய்யாரின் செய்தி சேகரிப்பு, ரிப்போர்டிங், அரசியல் தலைவர்களுடனான அவரது உறவு, அவரது ரிப்போர்டிங்கினால் இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பல தளங்களில் நடந்த சுவாரசியமான சில கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வந்திருக்கிறது. ஆறு பெரும் பிரிவுகளாக முதலில் இந்த நூலை பிரித்துக்கொண்டுள்ளார் 1. பிரிவினை 2. நேருவின் ஆட்சிக்காலம் 3. லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்காலம் 4.இந்திரா காந்தியின் ஆட்சிக்க்காலம் 5. நெருக்கடி
-
சுகந்தமாலினி
”கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பதுபோல், உன்னோடு வாழ்ந்திருக்க சாமி சொன்னதய்யா” என்ற பாடல் வரிகள் அதிகாலையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து மேலெழுந்து வந்து அழைத்தபடியே இருக்கின்றன. “இனம்புரியாத ஆழ்மனக்கிறுக்கு இந்தப்பாட்டு மேல எனக்கு, பவதாவோட குரல் இந்தப்பாடலுக்குள்ள அவ்ளோ பாந்தமா சேர்ந்து ஒலிக்கும். இளையராஜாவே பெண் குரல்ல பாடினதோன்னு சமயத்துல நினைச்சுக்குவேன் “ வாக்மேனின் ஒரு முனையை என் காதிலும், மற்றொன்றை அவன் காதிலும் வைத்துக்கொண்டு சந்த்ரு பேசிய இந்த 13 வருட பழைய உரையாடலை இரண்டு
-
ஒரு பெயர் மாற்றத்தின் கதை அல்லது Story of a ‘U’
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே ஜீலை 2009 ல் எங்களுக்கு மகன் பிறந்து அவனுக்கு அர்ஜீன் என்று நாமகரணம் சூட்டுவோம் என்று முடிவெடுத்த நேரம் ராகுகாலமா என்று நாங்கள் கவனிக்கவில்லை. பிறந்து 20 நாட்கள் கழித்துதான் பர்த் செர்டிபிகேட் வந்த்து பெயர் தப்பாக அச்சாகியிருந்த்து. ஒரு U அதிகம். ARJUN க்கு பதிலாக AR’U’JUN. இந்த்த் தவறை சரி செய்து பிறகு ,பாஸ்போர்ட் எடுத்து விசா எடுக்க வேண்டிய வேலைகளை செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இழுக்கும் என்பதால் இருக்கும் தவறான பர்த் செர்டிபிகேட்டைக்கொண்டே பாஸ்போர்ட்
-
மதராசபட்டினம் (2010)
’கிரீடம்’ என்கிற லோகித்தாஸின் அருமையான திரைக்கதையை சொதப்பி தன் திரைவாழ்வை துவக்கிய இயக்குனர் விஜய் மதராசபட்டினம் மூலம் புனர்ஜென்மம் பெற்றிருக்கிறார். சுதந்திரம் பெறாத இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னரின் பெண்ணுக்கும், தமிழ் வண்ணான் பையனுக்கும் வரும் காதல் சுதந்திரம் பெற்ற பிறகு என்ன ஆனது என்பதுதான் மதராசபட்டினத்தின் அடிப்படை முடிச்சு. மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால் வண்ணாரப்பேட்டை நிலங்கள் திருப்பித்தரப்படும் என்று ஒரு லகான், வெள்ளைக்கார கமிஷனருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை அடைய வரும் அடிமைப்பையனின் டைட்டானிக் என்று இரண்டு பெரிய
-
மனதில் நின்ற சிறுகதைகள் 2009
இந்த சென்ற வருடத்தில் நான் படித்து மனதில் நிற்கும் சிறுகதைகளை வகைப்படுத்தியிருக்கிறேன். எல்லா வார இதழ், மாத இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டுவதில்லை. ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் வார இதழ்களில் வெளியாகும் எல்லா சிறுகதைகளை படிக்கிறேன். வார்த்தை,உயிர்மை,உயிர் எழுத்து ஆகிய இதழ்களின் தலா 3 பிரதிகளும் காலச்சுவடு கதைகள் அவ்வப்போதும் இந்த சென்ற வருடத்தில் எனக்கு படிக்கக் கிடைத்தன. இதைத் தவிர்த்து இணையத்தில் வெளியிடப்படும் சிறுகதைகளில் சிலவும், புதிய கதைத் தளமாகிய http://www.tamilstory.in லும்
-
தமிழ்த்திரைப்பாடல்கள் – 2009
இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்குமார் ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன. தாய் தின்ற மண்ணே –ஆயிரத்தில் ஒருவன் – விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் – வைரமுத்து,
-
குந்தா (kundah)
சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் என்னால் தயங்காமல் என் சுட்டுவிரலால் மிகத்தெளிவாக காட்ட முடியும். அது ஊட்டிக்கு 32 கிலோமீட்டர் தெற்கே மேலே இருக்கிறது. ‘குந்தா’ என்றால் அநேகருக்கு தெரியாமல் போகலாம். குந்தா நீர்மின் திட்டம் என்ற பதம் மிகச்சிலருக்கு பரிச்சிய்மாக இருக்கும். அங்கேதான் என் பள்ளி நாட்கள் கழிந்தன. கடந்துவிட்ட 29 வருட வாழ்வில் 10 பொன்னான வருடங்கள் அங்கே கழிந்தன. கலக்கமில்லாத, களங்கமில்லாத, எண்களின் பின்னால் ஓடும் எண்ணற்ற துயரங்கள் எதுவும்
-
What’s your rashee? (2009)
ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not? WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும்
-
உன்னைப்போல் ஒருவன் (2009)
ஒரு மாற்றுமொழித்திரைப்படத்தினை அதன் ஜீவன் குலையாமல் தமிழாக்கம் செய்யும்போது சிறப்பான மொழியாடல்கள் ஒன்றைக்கொண்டே அதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்க்கிறது உன்னைப்போல் ஒருவன் குழு. கமலஹாசனும் இராமுருகனும் இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் உரையாடற்காட்சிகள், எள்ளல்களும் துள்ளல்களுமாய் இழைந்தோடும் ஜீவனுள்ள வசன்ங்கள் அனைத்திற்கும் திரையரங்கத்தில் விழும் கைதட்டல்களை கேட்க இன்னும் ஒரு ஜோடி காதுகள் வேண்டும். ”இதெல்லாம் எங்க முன்னோர்கள் சார். வேணும்னா அபிவாதயே சொல்லி ட்ரை பண்றேன்”” கமிஷனர் ஆபீஸில் இருக்கும் பழைய கம்ப்யூட்டர்களை சுட்டிக்காட்டி ஹேக்கர்
