-
ஒரு பால்ய நதிக்கரை
ஒவ்வொரு வருடமும் தவறாது மேலெழுந்து வருகிறது இப்புகைப்படம். பால்யத்தின் மகிழ்வு மிகு இத்தருணத்தைப்பற்றி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் என்றும் தீரா மகிழ்வையும், குதூகலத்தையும், எல்லா அரும்பெருஞ்செயல்களை விடவும் வாழ்வில் இத்தருணம் விஞ்சி நிற்பதையும் நினைந்து நினைந்து மகிழவும், வியக்கவும் நேரமும் வார்த்தைகளும் இருந்துகொண்டே இருக்கிறது. அதோ அந்த தூரமலை, அந்தப்புல்வெளி, கூடாரம், அங்கே கூடி நிற்கும் என் பள்ளித்தோழர், தோழியர், அண்மைப்பூங்கா, அந்தச்சாலை இன்னும் எல்லாமும் அப்படியே அங்கே இருக்கின்றன என்னைப்போலவே இந்தத்தருணத்தைப்பார்த்து
-
கடவுள் தொடங்கிய இடம்
ஜகமே தந்திரம் திரைப்படம் ஃபோகஸே இல்லாமல் சுற்றித்திரிந்து தந்த எரிச்சலை மறக்க, அதே திரைப்படத்தில் அகதிகள் நாடு விட்டு நாடும் செல்லும் காட்சிகள் நினைவுபடுத்திய “கடவுள் தொடங்கிய இடம்” நாவலை இந்த நீண்ட வாரயிறுதியில் மீண்டும் வாசித்தேன். 8 வருடங்களுக்கு முன்னால் வாராவாரம் ஆனந்தவிகடனில் வாசித்தபோது விட்ட நிறைய நல்ல தருணங்களை, புத்தகமாகப் படித்தபோது நன்கு புரிந்து, அனுபவிக்க முடிந்தது. நிஷாந்த் எனும் சிறுவன் “இயக்கத்தில்” சேர்ந்து விடக்கூடாது என்ற பெற்றோர்களின் அக்கறையினால் ஏஜெண்டிடம் பணம் கட்டி
-
ஓவியர் ஜீவாவின் தத்ரூப போஸ்டர்கள்
கொங்கு, நீலகிரி மாவட்டங்களில் 80-90களில் வளர்ந்தவர்கள் அனைவரும் ஓவியர் திரு.ஜீவா அவர்களின் (Jeeva Nanthan) போஸ்டர் வரைபடங்களை பார்க்காமல் இருந்திருக்கமாட்டார்கள். அற்புதமாக – தத்ரூபமாக போஸ்டர்களை, திரை நாயகர்களை வரைவார். சாதாரண பேப்பர் போஸ்டர்களை விடஇவர் ஓவியங்கள் தந்த தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். எங்கள் (நீலகிரி மாவட்டம்) மஞ்சூர் கோகுல் தியேட்டரில், இரண்டாவது ரிலீஸாகத்தான் படங்கள் வரும். படச்சுருள் பெட்டியோடேயே, முதலில் வெளியாகியிருந்த தியேட்டரில் வைக்கப்பட்ட சினி ஆர்ட்ஸ் கட்டவுட்டுகளும், போஸ்டர் வரைபடங்களும் வரும். படத்திற்கு எப்படி
-
அதிகாரமும் மூடமதியும்
எனக்கு மிகவும் பிடித்த, சமூக வலைதளங்கள் மூலமும், தனது பேச்சுகள்மூலமும் அறிமுகமான ஒரு ஐ ஆர் எஸ் அதிகாரி – எழுத்தாளார் மீது பல பெண்கள் இணைந்து பாலியல் குற்றச்சாட்டு விடுத்திருக்கிறார்கள்.தனிப்பட்ட வகையில் மிகவும் வலியும் ஏமாற்றமும் கொடுத்திருக்கும் நிகழ்விது. அத்தனை அறிவு, படிப்பு, நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நடை எல்லாமும் அதிகாரம் என்று ஒன்று வந்தபிறகு எல்லாவற்றையும் துச்சமென மதித்து, தனக்குக்கீழே பணிபுரிகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பெண்பால் மீதுதன் ஆழ்மன வக்கிரங்களை பிரயோகிப்பதை என்னவென்று
-
ஸ்த்ரீயுத்தசிக்ஷா
நேற்று அலுலக ப்ராஜக்ட் ஒன்றின் MS-Teams குழுமத்தில் இரண்டு பெண் ஊழியர்களிடையே சண்டை. அலுவலக விவகாரம் என்பதால் அதிகபட்ச கண்ணியம் காட்டப்பட்ட, டெட்டால் தடவப்பட்ட வார்த்தைகளோடு நிகழ்த்தப்பட்டாலும், அடிப்படையிலேயே இதுபோன்ற பெண்களுக்கிடையேயான சண்டைகளை, தெருமுனையிலும், சந்தைகளிலும், குழாயடிகளிலும் பார்த்து வளர்ந்த மனதுக்கு இச்சூழல் தரும் குதூகலம் சற்று ஓங்கித்தான் போனது. மனதால் புனையப்பட்ட பாப்கார்ன்கள், சமோசாக்களோடு மனம் தயாரானாலும், அடச்சே இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று ஆழ்மனம் காறித்துப்பியது. பொதுவாகவே ஐடி ப்ராஜக்டுகளில் சண்டைகள் இரண்டே காரணங்களுக்குதான்
-
ஒரு மறதி, ஒரு மிரட்சி
இந்த மாதம், மறதியால் Airtel க்கு மாதாந்திர கட்டணம் கட்ட மறந்துவிட்டேன் 😦 எப்போதும் ஒன்றாம்தேதிக்கென செக் லிஸ்டுகள் உண்டு. இந்த மாதம் இரண்டு முக்கிய அலுவலக வேலைகளின் தொடர் அழுத்தம் காரணமாக கணினி, தூக்கம் இரண்டை மட்டுமே கருத்தில் கொண்டு இதனை மறந்தே விட்டேன். அந்த இணைப்பு எங்கள் தொலைக்காட்சி, வீட்டிற்கான தரைவழி எண், என், அப்பா, மனைவி மூன்று பேரின் அலை பேசிகள் என யாவற்ருக்குமான ஒரு பொதுவான இணைப்பு. இந்தக்கட்டணம் கட்டாததில் எல்லாம்
-
”கபடவேடதாரி” பற்றி…
தன் ”யதி” நாவலில் துறவிகளில் ஒருவனை, “மொழியின் குழந்தை” என பெயரிட்டு அழைத்திருப்பார். ஆசிரியர் பா.ரா. என்னைப்பொறுத்தவரை அவரே மொழியின் குழந்தைதான். ஆசீர்வதிக்கப்பட்ட ப்ரத்யேகக் குழந்தை. அவரின் புனைவுகள் வெளியாகும்போதெல்லாம், அவற்றின் உள்ளடக்கத்தை விட, அவற்றுக்கு மொழி வழி அவர் செய்திருக்கும் நியாயங்களை, சோதனைகளை, தீர்வுகளை, அழகியலைக்காண பெரிதும் காத்திருப்பேன். பூனைக்கதை, யதி, இறவானுக்கு அடுத்ததாக மொழிவழி, ”கபடவேடதாரி”யில் அவர் செய்திருக்கும் அற்புதங்கள் அத்தனை அளப்பரியன.Pa Raghavan எழுதிவரும் புதிய நாவலான கபடவேடதாரியின் 20 அத்தியாயங்கள் நேற்றோடு
-
வனம் பார்த்த வாசல்
தி.ஜானகிராமனின் நாவல்களில் கொல்லைக்கதவைத்திறந்தால் காவிரி ஆறு ஓடும் ஒரு படிமம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். போலவே குந்தாவில் எங்களுக்கு வாசற்கதவைத்திறந்தால் காட்டின் தோற்றமும்.முதல் 5 வருடங்கள் அடர்ந்த சோலையைப்பார்த்த வீட்டிலும், மீதியிருந்த வருடங்களில் எதிரே பெரிய புல்வெளி பிறகு தேயிலைத்தோட்டச்சரிவு, எதிரே பச்சை பொழியும் மலைகளென கதவைத்திறந்தால் காட்டின் தோற்றம் காட்டிக்கொண்டேயிருந்த வீடுகள் வாய்த்திருந்தன. இன்று குந்தா மேல்முகாமில் , நாங்கள் இருந்த திசைக்கெதிர்திசையிலிருந்து Gireendran அண்ணா, தன் வீட்டினுள்ளிருந்து, வாசல் நோக்கிய இந்தப்புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். பார்த்த
-
EL INNOCENTE
El Inocente என்கிற ஸ்பானிஷ் மினி சீரீஸ் மிக சுவாரசியமாகவும், புத்திசாலித்தனமாகவும் எழுதபட்டு இயக்கபட்டிருக்கிறது. சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த திரில்லர்களுள் ஒன்று. மிகக்குறிப்பாக இதன் வித்தியாசமான கதைசொல்லல் உத்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சுய அறிமுகமகத்தொடங்கி காலத்தை சற்றே நகர்த்தி ஆரம்பித்து பின்னர் கதையின் காலகட்டத்தில் வந்து இணைந்துகொண்டு ஆற்றொழுக்கில் இணைந்துகொள்ளும்படியான எழுத்து, மிகுந்த ஆர்வமூட்டுவதாக இருந்தது. போலவே சிறிய சிறிய முடிச்சுகளை தொடர் முழுவதுமே உருவாக்கிக்கொண்டே வந்து, ஆங்காங்கே அதனை
-
நினைவில் காடுள்ள மிருகத்தின் மலைப்பயணக்குறிப்புகள் சில…
”நினைவில் காடுள்ள மிருகம்” என்ற வாக்கியத்தைப் படித்து அறிந்துகொள்வதற்கு முன்பாகவே நான் அந்த பதத்தின் பிரதிநிதியாகிருந்தேன், என்னை அறியாமலேயே. 10 வருட குந்தா ”வாழ்தலுக்குப்பிறகு” கல்லூரிப்படிப்பிற்காக மலையிறங்கி முற்றிலும் ஒரு புதிய சூழலுக்குள் நுழைந்த பின், இவ்வுலகும், மனிதர்களும், வாழ்வும் எல்லாமே அந்நியமாத்தோன்றின. என் உலகில் இதற்கெல்லாம் இடம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து தொக்கி நின்றது. திரும்ப வந்து இறங்கியதுதான் பிறந்த ஊர் என்றாலும், வளர்ந்து பிணைந்த மலை, என் மனதை விட்டு விலகவேயில்லை. உடல்
