-
புத்தகக்கண்காட்சி குறிப்புகள் – 2023
புத்தகக்கண்காட்சிக்கு மூன்றாவது முறையாக நேற்று சென்றுவந்து இந்த வருடக்கொள்முதலையும், நிறைய நல்நினைவுகளையும், இந்த குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டுவந்தேன். ஆயினும் என்ன, புத்தகங்கள் அல்லவா. எல்லாவற்றையும் தாண்டி அந்த இனிப்பான நிகழ்வு இந்தக்கசப்புகளை மறக்கத்தான் வைத்தது.
-
ஆனந்தபைரவியெனும் ஆழ்மனமுருக்கி
அந்த பழங்கோவிலின் எல்லா முனைகளையும் தட்டி எழுப்புகிறது இந்த ஆனந்தபைரவி. பல நூறு ஆண்டுகளாய் மந்திரங்களில் பண்பட்டுப்போயிருந்த தூண்களின் மேலேறி நாகஸ்வரத்துளைகளின் வழி எழும் ஆனந்த கீதம் அதன் அதிர்வுகளை இன்னும் அதிகரிக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாய் உளியின் ஓசைகளாயும், சிற்பிகளின் உரையாடற்சத்தங்களாயும் உறைந்த போயிருந்த சத்தங்கள் யாவும், ஆனந்த பைரவியின் விரல்கோத மோட்சம் பெறுகின்றன யாரோ ஒருவரின் அலைபேசியின் வழி என் கணினிக்கு வந்திறங்கும் இந்த இசை செவிப்புலனங்களத்தாண்டி ஆழ்மனதில் இறங்கி எல்லா செல்களையும்
-
புளிக்காய்ச்சல் திருநாசிச்சேவை:
ஹனுமத்ஜெயந்தி புளியோதரைக்காக, வீட்டில் இரவு புளிக்காய்ச்சல் செய்திருக்கிறார்கள். இந்த அதிகாலையில் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி இம்மார்கழிக் குளிர்க்காலைக்கு புதிய வண்ணம் தீட்டுகிறது. காரமும் புளிப்பும் ஒரு அடர் மாம்பழ நிறப்புடவை மீது அமைந்த சிவப்புச்சரிகை போல மிகப்பாந்தமாகப்படிந்து சிந்தை முழுவதையும் தன் பால் இழுக்கிறது. புளிப்பு, புளிப்பு என மனம் அதன் திசை நோக்கி புன்னகையோடு கைகுலுக்குகிறது. வெந்தயமும், பெருங்காயமும் அதன் கூட இணைந்து நாங்களும் கூடவே இருக்கிறோமே என குழைந்த அழைப்பின்வழி இன்னும்
-
புத்தாண்டு 2022
இன்னொரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. கடந்தகால சோதனைகளை சற்றே மட்டுப்படுத்திச்சென்ற வருடம் என்ற வகையில் எனக்கு 2021 பெரும்பலமான வருடமே. வருடம் முழுவதும் சம்பளம் வந்தது என்பதே சாதனையாகப்பார்க்கும் மன நிலை வாய்த்திருப்பது சற்றே வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் தெய்வம் எந்த நிலையிலும் கைவிடுவதில்லை என்ற மனோதிடம் இருக்கிறது. வருட இறுதியில் நற்செய்தியாக சம்பள உயர்வும், இதே அலுவகலத்தில் நிரந்தரப்பணியும் அமைந்ததுதான் பெருமகிழ்வுக்குரிய விஷயம். இதே போன்ற ஒன்றை 2018 லேயே எதிர்பார்த்தேன். 3 வருடத்தாமதம் என்றாலும், எப்போதும், எங்கிருந்தும்
-
நாசியைத் தீண்டாத வாசனைகள்
தீபாவளி வாரயிறுதியில் தென்காசி-மதுரைக்குப்போய்விட்டு மழையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. இரண்டு நாள் தற்சார்பு மருந்துகளுடன் போராடிவிட்டு மருத்துவரிடம் சென்றபோது தொண்டை தொடர்பான பிரச்னைகள் இல்லாததாலும், ஜூரம் இல்லாததாலும் சளியைக்கரைக்கும் மருந்துகளை எழுதிக்கொடுத்திருந்தார். அதற்குப்பிறகுதான் இந்த உண்மையான சோதனை தொடங்கியது. நாசிக்கு எந்த வாசனையும் வரவில்லை. கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ என ஆண்டாளை அடியொற்றி சோப்பு மணக்குமா, ஷாம்பு மணக்குமோ, என்றுமே நாறாத வேல்ஸ் சாம்பிராணியின் மணமும்தான்
-
நிஷாகந்தியின் குரல்
என் மனதுக்கு மிக நெருக்கமான “நித்திரை அழகியின் நிஷாகந்திப்பூ” நெடுங்கதைக்கு இது நாள் வரை என் குரல்தான் அடையாளம். என் குரல்வடிவில்தான் அதன் பாத்திரங்களை மனதுக்குள் பேசவிட்டு எழுதினேன். படித்தவர்களுக்கும் என் குரல்தான் அதில் பரிச்சியமாய் ஒலித்திருக்கும். இன்று முதல் அதற்கு என்னைவிட பன்மடங்கு சிறப்பான மற்றுமொரு அடையாளமாக திருமதி. Fathima Babu அவர்களின் குரலும் சேர்ந்திருக்கிறது. இதனை அவர்கள் வாசித்துமுடித்தபோது இந்தக்கதை வாசித்தவர்களுக்கு கிடைத்த “haunting” அனுபவம் இன்னும் சில மடங்குகள் அதிகமாக கேட்டவர்களுக்கும் கிடைத்தது.
-
பல்லாவரம் ரிட்டர்னும், சுகந்தமாலினியும்:
ஒரு மலைக்கிராமத்தில் இயற்கையும்,அமைதியும் சூழ வாழ்ந்த எனக்கு, பொருள்தேடி சென்னை வந்த முதல் சில மாதங்கள் கொடுத்த அலைதலையும், அயர்ச்சியையும் மறக்கவே இயலாது. இரைச்சலும், நெரிசலும், வியர்வையும், அழுக்குமென ஏதோ ஒரு வேற்றுக்கிரகத்தில் தண்டனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட கைதியென உணர்ந்த ஆரம்ப நாட்கள் அவை. ஏற்கனவே நிரம்பிவிட்ட ஒரு பெரும்துணிப்பொதியை அழுத்தி அழுத்தி மேலும் துணிகளைச்சேர்ப்பதுபோல, காலை நேரப்பேருந்துகளில் பெருங்கூட்டத்தினூடே ஏறி, நுழைந்து, கூட்டத்தாலேயே நகர்த்தப்பட்டு வியர்வை மழையில் நனைந்து, கசக்கித்தூக்கியெறிந்த காகிதம் போல அலுவலகம் வந்து சேரும்
-
உயிர்மை 200வது இதழ்
உயிர்மையின் 200வது இதழ் சற்று தாமதமாக நேற்றுதான் வந்து சேர்ந்தது. வெளிவந்த முதல் இதழைக்காத்திருந்து வாங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட 5 வருடங்கள் தொடர்ந்து வீட்டுக்கு வருவிக்கப்பட்டு, சில மாதங்கள் இடைவெளிவிட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டு படித்து ருசித்த அனுபவங்களெல்லாம் இருக்கின்றன. இடையில் முற்றிலும் சிறுகதைகள் , சூழியல் கட்டுரைகள் துறந்து, தரம் குன்றி, முழுக்க அரசியல் சார்பிதழாகிப்போனபோது படிப்பதை நிறுத்தினேன். இப்போது மீண்டும் முதலிதழின் அதே வாசனையோடு, காத்திரத்தோடு, நற்கலைஞர்களின் நல்ல படைப்புகளோடு சுவாரசியமான இதழாக வந்திருக்கிறது. அவசியம் வாசித்து
-
இரண்டு தாலிக்காட்சிகள்
திருமணமாகி மனைவிக்கு துபாய் வந்த புதிதில் மெடிகல் டெஸ்ட் எடுப்பதற்காக நாலேட்ஜ் வில்லேஜில் (Knowledge village) ல் இருக்கும் க்ளீனிக்குக்கு கூட்டிச்சென்றிருந்தேன். புதிய இடம், புதிய நாடு, மொழி போதாமை போன்ற கவலைகளால் ஏற்கனவே மிரட்சியாக இருந்த அவரை சற்று பதவுசாகத்தான் ஒவ்வொரு விஷயமாகப்பழக்கிக்கொண்டிருந்தேன். இந்த மெடிகல் டெஸ்ட் எடுக்கச்சென்ற இடத்தில் எக்ஸ்-ரே வுக்கான அறையின் வெளியே காத்த்துக்கொண்டிருந்த சில நிமிடங்களில் கிட்டத்தட்ட கலங்கிய விழிகளுடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார். என்னவோ ஏதோ என்று
-
குமாஸ்தா பணியும், எரிச்சலும்
சிறிய வயதிலிருந்தே குமாஸ்தா பணியில் இருப்பவர்களுக்கு கூடேயே இருக்கும் ஒருவித எரிச்சலை பார்த்தே வளர்ந்திருக்கிறேன். அரசுப்பணியில் இருப்பார்கள், நல்ல சம்பளம் இருக்கும், கடினமான பணி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாத, புதிதாக ஒன்றை உருவாக்குகிற கிரியேட்டிவ் பணிகளாகவும் இருக்காது. ஆனால் பணி சார்ந்து எரிச்சல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நிறைய யோசித்திருக்கிறேன் ஏன் இந்தப்பணிக்கு இவ்வளாவு எரிச்சலென்று. புதிரான பகுதியாகவே இருந்தது இது நாள் வரைக்கும். கடந்த இரு நாட்களாக அலுவலகத்தின் இப்போதிருக்கும் ஒரு ப்ராஜக்டின் உரிமையாளருக்கு அவருடைய கனடா
