Category: Uncategorized
-
சுகந்தமாலினி
”கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பதுபோல், உன்னோடு வாழ்ந்திருக்க சாமி சொன்னதய்யா” என்ற பாடல் வரிகள் அதிகாலையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து மேலெழுந்து வந்து அழைத்தபடியே இருக்கின்றன. “இனம்புரியாத ஆழ்மனக்கிறுக்கு இந்தப்பாட்டு மேல எனக்கு, பவதாவோட குரல் இந்தப்பாடலுக்குள்ள அவ்ளோ பாந்தமா சேர்ந்து ஒலிக்கும். இளையராஜாவே பெண் குரல்ல பாடினதோன்னு சமயத்துல நினைச்சுக்குவேன் “ வாக்மேனின் ஒரு முனையை என் காதிலும், மற்றொன்றை அவன் காதிலும் வைத்துக்கொண்டு சந்த்ரு பேசிய இந்த 13 வருட பழைய உரையாடலை இரண்டு…
-
தமிழ்த்திரைப்பாடல்கள் – 2009
இந்த வருடத்தில் வெளியான தமிழ் திரைப்படப் பாடல்களில் என் மனதிற்குப் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன். இது முற்றிலும் என் ரசனை சார்ந்தது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பாடல்கள் என்ற விகித்த்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்குமார் ஜி.வி.பிக்கு இந்த வருடம் இரண்டு ஜாக்பாட் திரைப்படங்கள் கிடைத்திருந்தன. இரண்டுமே இன்னும் வெளிவராவிட்டாலும் பாடல்கள் அனைத்தும் பெரும் அமர்க்களமாக இருந்தன. தாய் தின்ற மண்ணே –ஆயிரத்தில் ஒருவன் – விஜய் யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் – வைரமுத்து,…
-
Blender
”அரசூர் வம்சம்” நாவலின் தொடர்ச்சியாக இரா.முருகன் எழுதும் ‘விஸ்வரூபம்’ தொடராக திண்ணையில் வெளிவருகின்றது. நான்கு அத்தியாயங்களும் மிக நன்றாக இருப்பதுடன் அரசூர் வம்சத்தினை ஒரு இரவுக்குள் மற்றொருமுறை படிக்கவும் தூண்டியது. fabulous style. இந்த மாதம் வெளிவரும் அவரது இளமைப்பருவ biography போன்றதொரு நாவலை – நெம்பர் 40 ரெட்டைத்தெரு – படிக்க ஆவலாக இருக்கிறேன். அவரின் சமீபத்திய பத்திகளும், வலைமனையில் இடும் பதிவுகளும், மர்மயோகிக்கான discussion ல் அவரை கமல் இணைத்திருப்பதும் சுஜாதாவின் அடுத்த சுவடின்…
