Category: Uncategorized
-
புனைவு: வாசிப்பும் எழுத்தும் – ஓர் உரை
ஸ்வீடன் நாட்டின் வேஸ்தரஸ் (Västerås) நகர தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக நேற்று மாலை ‘புனைவு: வாசிப்பும், எழுத்தும்’ என்ற தலைப்பில் ஓர் உரையாற்றினேன். புனைந்து சொல்லப்படும் கதைகளின் மீது நம் ஆர்வம் எங்கிருந்து உருவாகி வளர்கிறது? வாசிப்பின் மீதான நம் ஆளுமையை விரிவாக்கிக் கொள்வது எப்படி? காட்சி ஊடகங்களின் பாதிப்பிலிருந்து மீண்டு, சொற்களின் உலகில் புகுந்து மகிழ்வது எப்படி? இதுவரை வாசிப்புப் பக்கமே ஒதுங்காதவர்கள் எங்கிருந்து தொடங்கலாம்? எழுதுவதற்கான அடிப்படைகள் என்ன? எப்படி ஒரு கதையை வாசகன் ரசிக்கும்…
-
கண்ணுக்கெதிரே காளையைச் சந்தித்தல்
எளிய கதைகளை எழுதுவதை விட, கிளாசிக்குகளை, உங்கள் மொழியை, சிந்தனையைச் சவாலுக்கு உட்படுத்துகிற கதைகளை எழுதுங்கள் என்கிறார் சல்மான் ருஷ்டி. இதனை ‘Work Close to the Bull’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பகுதியாகத் தன்னுடைய மாஸ்டர் க்ளாஸில் சொல்லிக்கொடுப்பார். காளைச்சண்டையை மேடையிலிருந்து காண்பதை விட, களத்தில் இறங்கிச் சவாலைச் சந்தித்துப்பார் என்பது உட்பொருள். வெளிவரவிருக்கும் என்னுடைய புதிய fantasy fiction நாவல் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிரியரிடம் முதன்முறையாக விவரிக்கச்சென்றேன். கிட்டத்தட்ட இருபது…
-
மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்
[திரு. ஜெயக்குமார் பரத்வாஜ் வெள்ளிமலையில் நடத்திய ஆலயக்கலை வகுப்பு பற்றிய கட்டுரை] தடுத்தாட்கொண்ட நாதர் மீதான சுந்தரர் தேவாரத்தோடு திரு. ஜெயக்குமார் இந்த ஆலயக்கலை வகுப்பை ஆரம்பித்தார். பித்தா பெருமானே என அவர் குரலுயர்ந்த அந்தத் தருணம், பலவிதங்களில் அலைந்து கொண்டிருந்த சிந்தனையையும், மனத்தையும் தடுத்தாட்கொண்டது. அடுத்த மூன்று நாள்களும் எங்களை அறிவால், பக்தியால். பாரம்பரியப் பெருமைகளால், ஆலயக்கோட்பாடுகளால், சிற்ப மரபால், இசையால், நகைச்சுவையால் மற்ற எந்த உலகாதீயக் கோட்பாடுகளுக்கும் கவனம் கொண்டு செல்லாமல் ஆட்கொண்டிருந்தார். ஓர்…
-
மழை – ஓர் ஓவியம், ஒரு சினிமாக்காட்சி, ஒரு கவிதை
மழை வரும் முஸ்தீபுகள் தெரிந்ததால், இன்று அதிகாலையிலேயே நடையைத் தொடங்கினேன். ஒரு சுற்று நிறைவதற்குள்ளாகவே வலித்துப் பெருகிப் பொழிந்தது. உடனே வீட்டிற்குச் சென்றுவிடாமல் மழை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். சென்ற வாரம் உயர்நீதிமன்றச்சாலையில் பூந்தூவலாய்ப் பொழிந்த தூறலில் மகிழ்வோடு நனைந்தது. சென்ற மாதம் மலையேற்றம் சென்றபோது போர்த்திமந்து அணையின் மேல் ஒதுங்க இடமின்றிக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மழையில் நனைந்தபடியே நடந்த நினைவு . அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் பழனி மலை அடிவாரத்தில் காவியணிந்த…
-
JUBILEE
ஹிமான்ஷூ ராய், தேவிகா ராணி என்னும் தம்பதிகள் பாம்பே டாக்கீஸ் என்ற பிரம்மாண்ட ஸ்டூடியோ ஒன்றை 1930 களில் மும்பையில் நடத்திக்கொண்டிருந்தனர். 1935ம் வருடம் ஹிமான்ஷூ தயாரிப்பில், தேவிகா ராணி ஹீரோயினாகவும், புதுமுக நடிகரான நஜ்முல் ஹசனும் இணைந்து நடித்த ”ஜவானி கி ஹவா” (இளமைக்காற்று) என்ற திரைப்படம் சில்வர் ஜுப்ளி கண்டது. அத்தனை கூட்டமும் பேரழகியான தேவிகாவைப்பார்க்கத்தான் வந்தன என்றாலும், நஜ்முல் – தேவிகா ஜோடியின் செண்டிமெண்ட் காரணமாக ஹிமான்ஷூ அடுத்த படத்தையும் இவ்விருவரையும் வைத்தே…
-
புத்தகக்கண்காட்சி குறிப்புகள் – 2023
புத்தகக்கண்காட்சிக்கு மூன்றாவது முறையாக நேற்று சென்றுவந்து இந்த வருடக்கொள்முதலையும், நிறைய நல்நினைவுகளையும், இந்த குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டுவந்தேன். ஆயினும் என்ன, புத்தகங்கள் அல்லவா. எல்லாவற்றையும் தாண்டி அந்த இனிப்பான நிகழ்வு இந்தக்கசப்புகளை மறக்கத்தான் வைத்தது.
-
ஆனந்தபைரவியெனும் ஆழ்மனமுருக்கி
அந்த பழங்கோவிலின் எல்லா முனைகளையும் தட்டி எழுப்புகிறது இந்த ஆனந்தபைரவி. பல நூறு ஆண்டுகளாய் மந்திரங்களில் பண்பட்டுப்போயிருந்த தூண்களின் மேலேறி நாகஸ்வரத்துளைகளின் வழி எழும் ஆனந்த கீதம் அதன் அதிர்வுகளை இன்னும் அதிகரிக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாய் உளியின் ஓசைகளாயும், சிற்பிகளின் உரையாடற்சத்தங்களாயும் உறைந்த போயிருந்த சத்தங்கள் யாவும், ஆனந்த பைரவியின் விரல்கோத மோட்சம் பெறுகின்றன யாரோ ஒருவரின் அலைபேசியின் வழி என் கணினிக்கு வந்திறங்கும் இந்த இசை செவிப்புலனங்களத்தாண்டி ஆழ்மனதில் இறங்கி எல்லா செல்களையும்…
-
புளிக்காய்ச்சல் திருநாசிச்சேவை:
ஹனுமத்ஜெயந்தி புளியோதரைக்காக, வீட்டில் இரவு புளிக்காய்ச்சல் செய்திருக்கிறார்கள். இந்த அதிகாலையில் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி இம்மார்கழிக் குளிர்க்காலைக்கு புதிய வண்ணம் தீட்டுகிறது. காரமும் புளிப்பும் ஒரு அடர் மாம்பழ நிறப்புடவை மீது அமைந்த சிவப்புச்சரிகை போல மிகப்பாந்தமாகப்படிந்து சிந்தை முழுவதையும் தன் பால் இழுக்கிறது. புளிப்பு, புளிப்பு என மனம் அதன் திசை நோக்கி புன்னகையோடு கைகுலுக்குகிறது. வெந்தயமும், பெருங்காயமும் அதன் கூட இணைந்து நாங்களும் கூடவே இருக்கிறோமே என குழைந்த அழைப்பின்வழி இன்னும்…
-
புத்தாண்டு 2022
இன்னொரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. கடந்தகால சோதனைகளை சற்றே மட்டுப்படுத்திச்சென்ற வருடம் என்ற வகையில் எனக்கு 2021 பெரும்பலமான வருடமே. வருடம் முழுவதும் சம்பளம் வந்தது என்பதே சாதனையாகப்பார்க்கும் மன நிலை வாய்த்திருப்பது சற்றே வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் தெய்வம் எந்த நிலையிலும் கைவிடுவதில்லை என்ற மனோதிடம் இருக்கிறது. வருட இறுதியில் நற்செய்தியாக சம்பள உயர்வும், இதே அலுவகலத்தில் நிரந்தரப்பணியும் அமைந்ததுதான் பெருமகிழ்வுக்குரிய விஷயம். இதே போன்ற ஒன்றை 2018 லேயே எதிர்பார்த்தேன். 3 வருடத்தாமதம் என்றாலும், எப்போதும், எங்கிருந்தும்…
-
நாசியைத் தீண்டாத வாசனைகள்
தீபாவளி வாரயிறுதியில் தென்காசி-மதுரைக்குப்போய்விட்டு மழையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தேன். அடுத்த நாளே ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. இரண்டு நாள் தற்சார்பு மருந்துகளுடன் போராடிவிட்டு மருத்துவரிடம் சென்றபோது தொண்டை தொடர்பான பிரச்னைகள் இல்லாததாலும், ஜூரம் இல்லாததாலும் சளியைக்கரைக்கும் மருந்துகளை எழுதிக்கொடுத்திருந்தார். அதற்குப்பிறகுதான் இந்த உண்மையான சோதனை தொடங்கியது. நாசிக்கு எந்த வாசனையும் வரவில்லை. கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ என ஆண்டாளை அடியொற்றி சோப்பு மணக்குமா, ஷாம்பு மணக்குமோ, என்றுமே நாறாத வேல்ஸ் சாம்பிராணியின் மணமும்தான்…
