Category: dubai metro
-
துபாய் மெட்ரோ பராக்!
’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது. நீண்டு நெளிந்து வளைந்து…
