Category: UAE
-
ஒரு பெயர் மாற்றத்தின் கதை அல்லது Story of a ‘U’
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே ஜீலை 2009 ல் எங்களுக்கு மகன் பிறந்து அவனுக்கு அர்ஜீன் என்று நாமகரணம் சூட்டுவோம் என்று முடிவெடுத்த நேரம் ராகுகாலமா என்று நாங்கள் கவனிக்கவில்லை. பிறந்து 20 நாட்கள் கழித்துதான் பர்த் செர்டிபிகேட் வந்த்து பெயர் தப்பாக அச்சாகியிருந்த்து. ஒரு U அதிகம். ARJUN க்கு பதிலாக AR’U’JUN. இந்த்த் தவறை சரி செய்து பிறகு ,பாஸ்போர்ட் எடுத்து விசா எடுக்க வேண்டிய வேலைகளை செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இழுக்கும் என்பதால் இருக்கும் தவறான பர்த் செர்டிபிகேட்டைக்கொண்டே பாஸ்போர்ட்…
-
துபாய் மெட்ரோ பராக்!
’he deserves this’ என்னருகில் நின்று கொண்டிருந்த ஒரு லெபானிய முதியவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் முதல் நாள் மெட்ரோ பயணத்திற்க்காக காலையில் காத்திருந்தேன். அந்த முதியவர் குறிப்பிட்டது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியும், துபாயின் மன்னருமாகிய பெருமதிப்பிற்குரிய ஷேக் முகம்மது அவர்களின் இந்த அருஞ்சாதனையைப்பற்றித்தான். அவரின் தொலைநோக்கும், திடமும், செயல்திறமும்தான் இந்த மெட்ரோ இரயில் திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு என்பது வளைகுடாவின் அனைத்துவிதமான மக்களின் எண்ணமுமாயும் இருக்கிறது. நீண்டு நெளிந்து வளைந்து…
-
இட்லி(ப்)பா!
அன்புமிகு அமீரக வாசத்தீர்! மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர் சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர் வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர் நினைத்தாலே மனம் குதூகலிக்கும் எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே! இளமஞ்சள் நிறத்தினதாய் இதயத்தை உருக்குவதாய் பதமாய் வார்த்துவைத்த இதமான இட்டிலிகள் இரண்டேனும் உண்டீரேல் அன்பரே அமிர்த்தமதை பூமியில் உண்ட ஆனந்தம் பெருவீரே! அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!
-
சில இசைக்குறிப்புகள்
கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு கிராமஃபோன் நிகழ்ச்சியை கேட்டேன். முன்பு போலில்லாது அமைதியான இரவை கிழித்துத்துவைக்கும் வண்ணம் விளம்பரதாரர்களின் இரைச்சல் அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஷாலுவின் குரல் என்னதான் குழைந்து கூப்பாடு போட்டாலும் ஒரு பாடலுக்கு ஒரு முறை இடையே வந்து ஒலிக்கும் ஜோய் ஆலுக்காஸின் ஆக்ரமணம்தான் அதிகம். பேசாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட நினைவுகளோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ என்னவோ? ஜேம்ஸ் இசையமைக்க வந்தபோது அவரின் பழைய ஆல்பம் பாடல்களில் ’தேவாலய இசை’ மிகுந்திருப்பதாக…
-
Funny!
துபாய் காவல்துறை அதிகாரிகளின் அளப்பரிய சேவையினையும் அவர்களின் தோழமையான துறை நடவடிக்கைகளையும் அனைவரும் நன்று அறிந்திருக்கிறோம். இருப்பினும் சமயங்களில் ஏன் இப்படிப்பட்ட நகைச்சுவையான சொற்றொடர்களை உதிர்த்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதுதான் புரியவே இல்லை. “Dog fights are not happening in the country. They are prohibited,” said Lieutenant Colonel Khalil Ebrahim, Deputy Director of Criminal and Investigation Department (CID). Funny!
-
சாலிக் விளைவுகள்
* காலையில் பார்துபாயிலிருந்து வந்து சேரவேண்டிய அலுவலகப்பேருந்து கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள 1 மணி நேரம் கழித்தே துவங்கியது அலுவலகம்.
-
Salik
சாலிக் எனப்படுவது துபாயின் இரண்டு எல்லைகளின் வாகனங்கள் உள்ளே வரவும் வெளியே போகவும் விதிக்கப்படும் வாகன வரி அல்லது பகல் கொள்ளை
-
Story of Hundi Phone
Hundi Phone என்றால் உலகிலேயே மிக அதிக தொலைதொடர்பு கட்டணங்களைக் கொண்ட எடிஸலாட்டின் (etisalat – Telecommunication department of UAE) சேவையை பயன்படுத்தாமல் இந்தியாவிலிருந்து அழைப்புகளை பெற்றுக்கொள்ளும் முறை. அல்லது அரசாங்கத்தினை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முறை.
-
No.7 = 11 million AED
* அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது கார் நம்பர் பிளேட்டுகளுக்காக ஏலத்தில் மொத்தம் வசூலான தொகை – 41.51 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் திர்ஹாம்கள். (AED) [ இன்றைய நிலவரப்படி 1 AED = 11.09 இந்திய ரூபாய்கள்.]
-
Sivaji & Dubai Media
இன்னும் விடாத சிவாஜி ஜுரம் பற்றிப்பரவுகிறது துபாய் மீடியாவிலும். இன்றைய 7days செய்தித்தாளின் முதல் பக்கத்தை அலங்கரிக்கிறது ரஜினி நிறைய வீடியோகேம்களின் இடையே சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம். துபாயிலுள்ள ரஜினி ரசிகர் மன்றம் labourers க்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சொல்கிறது செய்தி.
