Category: malluwood
-
வனப்பிரஸ்தம்(1999)
மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை நமக்குள் நாமாகவே உருவகப்படுத்திக்கொண்டு அவர்களாகவே மாறிவிடுகிற அழகியல் நிகழ்வுகள் சிறுவயது முதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இன்று வரையிலும். ராஜராஜசோழன் மீதான எனது அபிமானங்கள் அவன் அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை இம்மியளவும் குறையாமல் இருக்கிறது. என்னை அவனாகவே உருவகித்துக்கொண்டு பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் நாட்களிலெல்லாம் நான் அடையும் பெருமிதங்களுக்கு அளவே இல்லை. உளவியல் ரீதியாக இதனை விவாதித்துக்கொண்டால் வெறுமையும், கோபமும் வரும் ஆனால் அழகியல் நோக்கில் காணும்போது எல்லாமும் மறைந்த ஏகாந்தத்தை உணரமுடியும்.
-
உதயனானு தாரம் (2005)
நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தைகள் நம்மில் பலருக்கு மூன்றாம்பக்க செய்தியாக பத்திரிக்கைகளில் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். ஒருவனது வாழ்க்கையினையே புரட்டிப்போடவல்ல துரோகம் பற்றிய திரைப்படங்களை –அது tragic plot என்பதால் – பெரும்பாலான கதாசிரியர்கள் அல்லது இயக்குனர்கள் எடுக்க விரும்புவதில்லை அல்லது அப்படி ஒரு சம்பவம் அவர்கள் கதையில் நிகழுமென்றாலும் அதனை பற்றிய டீடெய்ல்ஸ் பற்றி பேசாது முடிவுகளை மட்டும் சொல்லிக்கொண்டு போய்விடுவார்கள்.
-
பரதம் (1991)
மலையாள சினிமாவின் தனித்தன்மையே அங்கு சிறந்த எழுத்தாளர்களும், ஆகச்சிறந்த இயக்குனர்களும் இணைந்து தத்தம் பணிகளை சிறப்புற செய்வதுதான் என எண்ணுகிறேன். இந்த கூட்டு முயற்சிகளில் லோகித்தாஸும், சிபி மலையிலும் சிறந்த கூட்டணி என தயக்கமின்றி சொல்லலாம். பரதமும் அவர்களின் முயற்சியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று.
