Category: Classic
-
Saawariya (2007)
தஸ்த்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” நாவலை தழுவியது முன்குறிப்பு சாவரியா ஒரு சாதாரண பார்வையாளனுக்காக நிச்சயம் எடுக்கப்படவில்லை. அது அழகியல் நோக்குடன் திரையை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மட்டும்தான். இதனை மிக தெளிவாக புரிந்துகொண்டே திரையரங்கத்திற்கு சென்றால் பிழைக்கலாம். இல்லையென்றால் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. புதுமுகங்களின் காதல் கதை என்றால் நிச்சயம் ஒரு கமர்ஷியல் என்டர்டெயினர் என்ற எண்ணத்தில்தான் எல்லோருமே சென்றோம். ஆனால் இப்படி ஒரு புதிய வடிவத்தை எதிர்ப்பார்க்காத பெரும்பான்மையானோர் பாதியிலேயெ கிளம்பிவிட்டனர். அரங்கம் நிறைந்த காட்சியாக தொடங்கிய…
-
வனப்பிரஸ்தம்(1999)
மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை நமக்குள் நாமாகவே உருவகப்படுத்திக்கொண்டு அவர்களாகவே மாறிவிடுகிற அழகியல் நிகழ்வுகள் சிறுவயது முதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இன்று வரையிலும். ராஜராஜசோழன் மீதான எனது அபிமானங்கள் அவன் அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை இம்மியளவும் குறையாமல் இருக்கிறது. என்னை அவனாகவே உருவகித்துக்கொண்டு பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் நாட்களிலெல்லாம் நான் அடையும் பெருமிதங்களுக்கு அளவே இல்லை. உளவியல் ரீதியாக இதனை விவாதித்துக்கொண்டால் வெறுமையும், கோபமும் வரும் ஆனால் அழகியல் நோக்கில் காணும்போது எல்லாமும் மறைந்த ஏகாந்தத்தை உணரமுடியும்.
-
பரதம் (1991)
மலையாள சினிமாவின் தனித்தன்மையே அங்கு சிறந்த எழுத்தாளர்களும், ஆகச்சிறந்த இயக்குனர்களும் இணைந்து தத்தம் பணிகளை சிறப்புற செய்வதுதான் என எண்ணுகிறேன். இந்த கூட்டு முயற்சிகளில் லோகித்தாஸும், சிபி மலையிலும் சிறந்த கூட்டணி என தயக்கமின்றி சொல்லலாம். பரதமும் அவர்களின் முயற்சியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று.
-
Memoirs of a Geisha (2005)
(Geisha – A Japanese woman trained to entertain men with conversation and singing and dancing) இளமையில் வறுமை மட்டும் கொடுமை அல்ல மனவெறுமையும்தான் என்பதனை நாம் வாழ்க்கைபாதையெங்கும் உணர்ந்துகொண்டேதான் இருக்கின்றோம். தந்தை தாயின் அன்பில் உழன்று, உறவினர்களின் அன்பினில் திளைத்து , நல்ல கல்வி கற்று, நன்கு உண்டு விளையாடி இளமையின் அனைத்து பரிமாணங்களையும் அனுபவித்து வாழும் வாழ்வு ஒரு புறம். இவை அத்தனையும் இல்லாமல் வறுமையும் வெறுமையும் துரத்த போராட்டங்களையே…
-
Life in a Metro
இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும், தியேட்டரில் நான் படம் பார்க்கச் சென்றபோது ஆபரேட்டரையும் சேர்த்து மொத்தம் மூன்றே பேர்தான் திரைப்படம் பார்த்தோம் என்றாலும், இதுவரையில் வந்த எந்த விமர்சனமும் favourable ஆக இல்லை என்றாலும், எனக்கு சமீபத்தில் வந்த ஹிந்தி திரைப்ப்டங்களில் ஏனோ மிகவும் பிடித்தது இந்த திரைப்ப்டம் என்பதாலும், மிக சிறிய அழகிய மாற்றங்கள் சில செய்திருந்தால் இந்த திரைப்படமும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்திருக்கும் என்பதாலும் இதனை பற்றி…
-
Birds
தமிழில் இது வரையிலும் ஒரு சிறந்த திகில் / அமானுஷ்ய திரைப்படங்கள் (horror / evil thrillers) வரவில்லை என்று உறுதியாக நம்புபவர்கள் குழுவில் நானும் உண்டு. இப்படி சொல்பவர்கள் உதாரணம் சொல்லும்போது முதலில் கை காட்டுவது ஆல்பிரட் ஹிட்ச்சாக் (Alfred Hitchcock) திரைப்படங்கள்தான் எனபதும் திண்ணம். நானும் அவ்விதமே.
