Category: bollywood
-
What’s your rashee? (2009)
ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not? WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும்…
-
KAMINEY(2009)
உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே பிளாக் காமெடி தோய்த்த ஒரு ஆக்ஷன் திரில்லர் பார்க்க ஆசைப்பட்டீர்களாயின் கண்டிப்பாக கமீனே உங்களுக்கான திரைப்படம்தான். கமீனே என்ற சொல்லை rascals / scoundrels…
-
Imtiaz Ali – 2 – Jab we met
இம்தியாஸ் அலி பற்றிய எனது முதல் பதிவின் முதல் வரி, “வாழ்க்கையை ஒரு கோழி இறகைவிட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி..” என்று எழுதியிருந்தேன். ‘ஜப் வீ மெட்’ திரைப்படத்திற்கு அத்தனை அழகையும் கொண்டு வந்து கொட்டி அதனை ஒரு அர்த்தமுள்ள திரைக்கதையாக உருவாக்கியிருப்பது காத்ரீனா கைஃ கரீனா கபூர் அழகுற ஏற்று நிறைவாக நடித்திருக்கும் கீத் என்னும் அந்த கதாபாத்திரம்தான்.
-
Imtiaz Ali -1
வாழ்க்கையை ஒரு கோழி இறகினை விட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி, நொடிக்கு நொடி முடிவினை, மனதினை மாற்றிக்கொண்டேயிருக்கிற உயர்வகுப்புப் பையன் ஒருவன், ஒரு சிறிய அறைக்குள் இருந்துகொண்டு தனது பெரிய குடும்பத்தினை கட்டிக்காக்கிற ஒரு பஞ்சாபித்தாத்தா, தனது மகன் மனது முதிராமல் செய்துவிட்ட தவறுகளை பெரிதும் அலட்டிக்கொள்ளாது மன்னிக்கிற ஒரு தந்தை இப்படி இம்தியாஸ் அலியின் இரண்டு திரைப்படங்கள், அவரின் ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எல்லாமே எனது மனதுக்கியைந்தன. இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள்…
-
1 அழகி,1 gang & ஸ்ரீராம்ராகவன்
ஸ்ரீராம் ராகவனின் இரண்டு நேர்த்தியான த்ரில்லர்கள் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கான பதிலை எளிமையாக்கிவிடும். இந்தியாவின் சிறந்த இயக்குனர்கள் பெயர்கள் கேட்கப்படும்போது மறக்காமல் SR பெயரை எழுதிச் சென்றிடுவேன். இரண்டுமே எந்த காலத்திலும் reference ஆக வைத்துக்கொள்ளக்கூடிய சுவாரசியமான திரைக்கதைகள். பெரிய நடிகர்கள் இல்லாவிடினும், கமர்ஷியல் சாகசங்கள் இல்லாமலும், அந்தந்த நாட்களில் நடப்பு ட்ரெண்ட்களில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்காமலும் தேர்ந்த திரைப்படங்களை வழங்கும் இயக்குனர்களில் ஸ்ரீராம்ராகவனுக்கும் இடம் உண்டு.
-
RACE(2008)
பெரும் திருப்பங்களைக்கொண்ட, யூகிக்க முடியாத சம்பவங்களின் கோர்வைகளை உள்ளடக்கிய, விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடும் எல்லா த்ரில்லர் திரைக்கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் நான்.
-
Saawariya (2007)
தஸ்த்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” நாவலை தழுவியது முன்குறிப்பு சாவரியா ஒரு சாதாரண பார்வையாளனுக்காக நிச்சயம் எடுக்கப்படவில்லை. அது அழகியல் நோக்குடன் திரையை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மட்டும்தான். இதனை மிக தெளிவாக புரிந்துகொண்டே திரையரங்கத்திற்கு சென்றால் பிழைக்கலாம். இல்லையென்றால் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. புதுமுகங்களின் காதல் கதை என்றால் நிச்சயம் ஒரு கமர்ஷியல் என்டர்டெயினர் என்ற எண்ணத்தில்தான் எல்லோருமே சென்றோம். ஆனால் இப்படி ஒரு புதிய வடிவத்தை எதிர்ப்பார்க்காத பெரும்பான்மையானோர் பாதியிலேயெ கிளம்பிவிட்டனர். அரங்கம் நிறைந்த காட்சியாக தொடங்கிய…
