Category: வாழ்க்கை
-
இட்லி(ப்)பா!
அன்புமிகு அமீரக வாசத்தீர்! மணக்க மணக்க மதுரா பொங்கல் உண்பீர் சங்கீதாவில் சகலடிபனும் சரிக்கட்டு கட்டுவீர் வசந்தம் சரவணன் என பவன்கள் பலவும் காண்பீர் நினைத்தாலே மனம் குதூகலிக்கும் எம் குசும்பர் படைத்த இட்லிகளை தவறவிட்டாலோ ஐயா நீர் ஒருபிறவிப்பயனை இழப்பீரே! இளமஞ்சள் நிறத்தினதாய் இதயத்தை உருக்குவதாய் பதமாய் வார்த்துவைத்த இதமான இட்டிலிகள் இரண்டேனும் உண்டீரேல் அன்பரே அமிர்த்தமதை பூமியில் உண்ட ஆனந்தம் பெருவீரே! அன்பு நண்பரின் இட்லிக்காகவும் அன்புக்காகவும் எழுதிய பா!
-
எக்ஸலன்ட்- பா.ரா.
தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.! சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட…
-
Dreams & Questions
உங்கள் கனவுகளில் celebrities யாரேனும் வருவதுண்டா? எப்போதாவது அல்ல எப்போதுமே. எனக்கு இந்த syndrome இருக்கிறது கல்லூரி நாட்களிலிருந்தே. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறையேனும் நான் தமிழ்நாட்டு VIP களை கனவில் சந்தித்துவிடுகிறேன்.
-
Weekend (charumania)
ஒன்னாம்ராகம்பாடி– ஷாலுfaisal – சிவாஜி ஹவுஸ்full – ஈரக்குழாயில் சுடுதண்ணீர் – லதாமங்கேஷ்கர் – லபான்அப்– பருப்புபொடி–ஹரேக்ருஷ்ணா–மூட்டைப்பூச்சி–பெஸ்டிசைட்–
-
என்னைப்பற்றி எட்டு!
அழைத்தமைக்கு நன்றி பிரகாஷ் . நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள். 1.12ம் வகுப்பு படிக்கும்போது ரபி பெர்னார்ட் நடத்திய சொல்வீர் வெல்வீர் என்கிற தமிழகம் தழுவிய வினாடி வினா நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 250 மாணவர்களின் போட்டியை தாண்டி, நீலகிரி,பெரியார்,கோவை மாவட்டங்களின் சார்பில் கலந்து கொண்ட 35 பள்ளிகளின் போட்டிகளை தாண்டி மூன்று மாவட்டங்களின் மொத்த பிரதிநிதியாக கலந்து கொண்டது. இறுதி பரிசு கிடைக்காவிடினும், என்னுடைய பொதுஅறிவு திறனுக்கு கிடைத்த…
-
குன்னக்குடி + சுத்த தன்யாசி = bliss
வாரத்தின் முதல் நாள். வார விடுமுறையின் தூக்கம் கெடாத காலைப்பொழுது – நல்ல குளியல் போடலாமென்று நினனத்திருக்கும் வேளையில் கடும் வெய்யிலில் காய்ந்து நெருப்பாய் கொட்டும் குளியலறை ஷவர் – சுட சுட கொண்டு வைக்கப்பட்ட காலை உணவு – திடீரென்று நின்று போய்விட்ட அலுவ்லக பேருந்தின் a/c . அந்த புழுக்கத்திலும் அலறும் ஹிமேஷ் ரேஷமிய்யாவின் குரல். இவ்வளவு கொடுமைகளையும் ஈடு கட்டும் அருமருந்தாய் அமைந்தது இந்த அருமையான கீர்த்தனை. ஆஹா!…
