Category: பள்ளிநாள் ஞாபகம்
-
குமாஸ்தா பணியும், எரிச்சலும்
சிறிய வயதிலிருந்தே குமாஸ்தா பணியில் இருப்பவர்களுக்கு கூடேயே இருக்கும் ஒருவித எரிச்சலை பார்த்தே வளர்ந்திருக்கிறேன். அரசுப்பணியில் இருப்பார்கள், நல்ல சம்பளம் இருக்கும், கடினமான பணி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாத, புதிதாக ஒன்றை உருவாக்குகிற கிரியேட்டிவ் பணிகளாகவும் இருக்காது. ஆனால் பணி சார்ந்து எரிச்சல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நிறைய யோசித்திருக்கிறேன் ஏன் இந்தப்பணிக்கு இவ்வளாவு எரிச்சலென்று. புதிரான பகுதியாகவே இருந்தது இது நாள் வரைக்கும். கடந்த இரு நாட்களாக அலுவலகத்தின் இப்போதிருக்கும் ஒரு ப்ராஜக்டின் உரிமையாளருக்கு அவருடைய கனடா…
-
ஓவியர் ஜீவாவின் தத்ரூப போஸ்டர்கள்
கொங்கு, நீலகிரி மாவட்டங்களில் 80-90களில் வளர்ந்தவர்கள் அனைவரும் ஓவியர் திரு.ஜீவா அவர்களின் (Jeeva Nanthan) போஸ்டர் வரைபடங்களை பார்க்காமல் இருந்திருக்கமாட்டார்கள். அற்புதமாக – தத்ரூபமாக போஸ்டர்களை, திரை நாயகர்களை வரைவார். சாதாரண பேப்பர் போஸ்டர்களை விடஇவர் ஓவியங்கள் தந்த தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். எங்கள் (நீலகிரி மாவட்டம்) மஞ்சூர் கோகுல் தியேட்டரில், இரண்டாவது ரிலீஸாகத்தான் படங்கள் வரும். படச்சுருள் பெட்டியோடேயே, முதலில் வெளியாகியிருந்த தியேட்டரில் வைக்கப்பட்ட சினி ஆர்ட்ஸ் கட்டவுட்டுகளும், போஸ்டர் வரைபடங்களும் வரும். படத்திற்கு எப்படி…
-
குந்தா (kundah)
சொர்க்கம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் என்னால் தயங்காமல் என் சுட்டுவிரலால் மிகத்தெளிவாக காட்ட முடியும். அது ஊட்டிக்கு 32 கிலோமீட்டர் தெற்கே மேலே இருக்கிறது. ‘குந்தா’ என்றால் அநேகருக்கு தெரியாமல் போகலாம். குந்தா நீர்மின் திட்டம் என்ற பதம் மிகச்சிலருக்கு பரிச்சிய்மாக இருக்கும். அங்கேதான் என் பள்ளி நாட்கள் கழிந்தன. கடந்துவிட்ட 29 வருட வாழ்வில் 10 பொன்னான வருடங்கள் அங்கே கழிந்தன. கலக்கமில்லாத, களங்கமில்லாத, எண்களின் பின்னால் ஓடும் எண்ணற்ற துயரங்கள் எதுவும்…
