Category: மயல் மலர்ந்த காதை
-
மயல் மலர்ந்த காதை – 2
நாவலின் கருவும், களமும் உருவான பிறகு, ஆசிரியருக்கு அனுப்பிய ஒலிக்குறிப்பை என் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினேன். வாசிப்பிலும், எழுத்திலும் சிறந்த என் நெருங்கிய வட்டம் அது. இதைக்கேட்டதும் பதறினார்கள். இந்த நாவலில் காமம் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் இருந்தது. அது சரியாக வருமா என்று அஞ்சினார்கள். அதற்கு முன்பு நான் எழுதத் தொடங்கிய கிளாசிக் நாவல் எனக்கு எழுத்துவட்டத்தில் மிகச்சிறந்த அறிமுகத்தை எனக்கு வழங்கும் என்று நம்பியிருந்தார்கள். முதலில் வரும் நாவலாக இதுவா அமைய வேண்டும்…
-
மயல் மலர்ந்த காதை – 1
இந்த வருடம் வேறு ஒரு பெரிய நாவலைத் திட்டமிட்டருந்தேன். பெரிய கேன்வாஸில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஃபேண்டஸி ஃபிக்ஷன் கதையாக அது இருந்தது. அதைப் பற்றி ஆசிரியரிடம் பேசி, விவாதித்து, எழுதவும் தொடங்கினேன். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றை எழுதிக்கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் நேரில் அழைத்தார். ‘இதை தமிழகத்தில் வேறு எந்த பத்திரிகை ஆசிரியரிடம் கொடுத்தாலும் உடனே பிரசுரம் செய்வார். சம்பவங்கள், ஸ்ட்ரக்ச்சர் எல்லாம் நன்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த நாவலை மொழியால் இன்னும்…
