Category: பொது
-
ஸ்த்ரீயுத்தசிக்ஷா
நேற்று அலுலக ப்ராஜக்ட் ஒன்றின் MS-Teams குழுமத்தில் இரண்டு பெண் ஊழியர்களிடையே சண்டை. அலுவலக விவகாரம் என்பதால் அதிகபட்ச கண்ணியம் காட்டப்பட்ட, டெட்டால் தடவப்பட்ட வார்த்தைகளோடு நிகழ்த்தப்பட்டாலும், அடிப்படையிலேயே இதுபோன்ற பெண்களுக்கிடையேயான சண்டைகளை, தெருமுனையிலும், சந்தைகளிலும், குழாயடிகளிலும் பார்த்து வளர்ந்த மனதுக்கு இச்சூழல் தரும் குதூகலம் சற்று ஓங்கித்தான் போனது. மனதால் புனையப்பட்ட பாப்கார்ன்கள், சமோசாக்களோடு மனம் தயாரானாலும், அடச்சே இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று ஆழ்மனம் காறித்துப்பியது. பொதுவாகவே ஐடி ப்ராஜக்டுகளில் சண்டைகள் இரண்டே காரணங்களுக்குதான்…
-
சில இசைக்குறிப்புகள்
கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு கிராமஃபோன் நிகழ்ச்சியை கேட்டேன். முன்பு போலில்லாது அமைதியான இரவை கிழித்துத்துவைக்கும் வண்ணம் விளம்பரதாரர்களின் இரைச்சல் அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஷாலுவின் குரல் என்னதான் குழைந்து கூப்பாடு போட்டாலும் ஒரு பாடலுக்கு ஒரு முறை இடையே வந்து ஒலிக்கும் ஜோய் ஆலுக்காஸின் ஆக்ரமணம்தான் அதிகம். பேசாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட நினைவுகளோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ என்னவோ? ஜேம்ஸ் இசையமைக்க வந்தபோது அவரின் பழைய ஆல்பம் பாடல்களில் ’தேவாலய இசை’ மிகுந்திருப்பதாக…
