Category: புத்தகம்
-
அமியின் ஜெமினி
நான் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்தவன். ஆகவே காடு புகுதல் என்பது தினசரிச் செய்கையாக இருந்தது. அப்போதெல்லாம் சிந்தனை மொத்தத்தையும் விழிகளில், செவிகளில் கொண்டு குவிப்பதற்குப் பயிற்சியளித்திருப்பார்கள். ஏனெனில் திடீரென ஒரு முயல் கடக்கும். சட்டென ஒரு மான் தாவி ஓடும். புலி பாயலாம். கரடி தாக்கலாம். அது வரை பார்த்திராத ஒரு வண்ணப்பறவை பறந்து போகும். இது போன்ற சந்தோஷங்களும், அதிர்ச்சிகளும்தான் வனம் புகுதலின் ஆதாரமே . ஆகவே மொத்தக் கவனத்தையும் விழியில் கொண்டு குவிப்பது…
-
கடவுள் தொடங்கிய இடம்
ஜகமே தந்திரம் திரைப்படம் ஃபோகஸே இல்லாமல் சுற்றித்திரிந்து தந்த எரிச்சலை மறக்க, அதே திரைப்படத்தில் அகதிகள் நாடு விட்டு நாடும் செல்லும் காட்சிகள் நினைவுபடுத்திய “கடவுள் தொடங்கிய இடம்” நாவலை இந்த நீண்ட வாரயிறுதியில் மீண்டும் வாசித்தேன். 8 வருடங்களுக்கு முன்னால் வாராவாரம் ஆனந்தவிகடனில் வாசித்தபோது விட்ட நிறைய நல்ல தருணங்களை, புத்தகமாகப் படித்தபோது நன்கு புரிந்து, அனுபவிக்க முடிந்தது. நிஷாந்த் எனும் சிறுவன் “இயக்கத்தில்” சேர்ந்து விடக்கூடாது என்ற பெற்றோர்களின் அக்கறையினால் ஏஜெண்டிடம் பணம் கட்டி…
-
மோகமுள் – நாவல்
”மோகமுள்” நாவலை முதன்முதலில் கல்லூரிக்காலத்தில்தான் படித்திருந்தேன். முழுமையாக படித்திருக்கிறேன்தான். ஆனால் அந்த அனுபவத்தை முழுதும் உள்வாங்கவில்லை என்று இரண்டாவது முறை முழுமையான வாசிப்புக்குப்பிறகு இப்போது உணர்ந்தேன். ஏற்கனவே படித்திருந்தாலும், சொந்தமாக என்னிடம் மோகமுள் புத்தகம் இல்லை என்ற காரணத்தினாலேயே 2015ல் காலச்சுவடு கிளாசிக் பதிப்பித்த புதிய பதிப்பை வாங்கி வைத்திருந்தேன். அவ்வப்போது கும்பகோணம் போர்ஷன்கள், தங்கம்மாவின் கதை, காவிரி வர்ணனைகள் என்று படித்துக்கொண்டிருந்தாலும் (2019) ஜனவரி 1ம் தேதி ஆரம்பித்து 8ம்தேதி வரை நாளொன்றுக்கு 60 பக்கம்…
-
Scoop by Kuldeep Nayar
ஸ்கூப் ( Scoop) இந்தியாவின் மிக மூத்த பத்திரிக்கையாளர்களுள் ஒருவரான குல்தீப் நய்யாரின் செய்தி சேகரிப்பு, ரிப்போர்டிங், அரசியல் தலைவர்களுடனான அவரது உறவு, அவரது ரிப்போர்டிங்கினால் இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பல தளங்களில் நடந்த சுவாரசியமான சில கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வந்திருக்கிறது. ஆறு பெரும் பிரிவுகளாக முதலில் இந்த நூலை பிரித்துக்கொண்டுள்ளார் 1. பிரிவினை 2. நேருவின் ஆட்சிக்காலம் 3. லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்காலம் 4.இந்திரா காந்தியின் ஆட்சிக்க்காலம் 5. நெருக்கடி…
-
எக்ஸலன்ட்- பா.ரா.
தீவிரவாதம் சீக்கிரம் அழிந்துவிடவேண்டும் என்று எண்ணாதவர் யார்? எல்லோருக்கும் அவ்வெண்ணம் இருப்பினும் எனக்கு அதன் சதவீதம் சற்று அதிகமே. காரணம் யாதெனக்கேட்டால் அன்றுதானே எழுத்தாளர் பாரா துப்பாக்கிகள், தோட்டாக்கள், பதுங்கு குழிகள் சதித்திட்டங்கள் மற்றும் அவைசார்ந்த இன்னபிற வஸ்துக்களை அறவே அப்புறப்படுத்திவிட்டு அவரின் பிரத்தியேக ஸ்டைலில் எழுதும் மற்ற நாவல்கள், சிறுகதைகள் மற்றும் எக்ஸலண்ட் போன்ற புத்தகங்களை நாம் தடையின்றி படிக்க முடியும்.! சுயமுன்னேற்றப்புத்தகங்களின்பால் எனக்கிருந்த காதலெல்லாம் கல்லூரி முடிந்த ஒரு வருடத்தில் காணமற்போயிற்று. ஆனால் இவ்வருட…
-
மூன்று விரல் – இரா.முருகன்
ஒரு நாவலை முழுமையாக ரசிக்க முடிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் content, சில எழுத்தாளர்களின் மொழிநடை, கதைகளில் களன், கதாநாயகர்களின் பிரமிக்கத்தக்க செய்கைகள் என இந்த பட்டியல் நீளும். இவற்றில் முக்கியமான ஒன்று நாவலில் நம்மையே நாம் பார்த்துக்கொள்ளும் தருணங்கள்தான். மூன்றுவிரல் நாவலில் அது சாத்தியமாயிற்று.
-
கடிகை
வரலாற்றில் நாயகர்களின் கதைகளை கேட்கும் ஆர்வங்கள் போலவே வில்லன்களையும் அவர்களின் negative energy வளர்ந்த விதங்களையும், அவர்களிடம் இருக்கும் ஆதர்ச மற்றும் ஆக்கபூர்வ குணாதிசயங்களை அறிந்து கொள்வதிலும் நமக்கு மிகப்பெரும் ஆர்வம் அல்லது inquisity இருந்துகொண்டேதான் இருக்கிறது. (ஆட்டோசங்கர் சீரியல், சதாம் ஹுசைன் புத்த்கம், ஹிட்லரின் கதாபாத்திரம் etc..)
-
Ponniyin selvan on safehands
பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தாலும் அவரது ஆரம்பிக்கப்பட்டு hold செய்யப்பட்டிருக்கும் மருதநாயகம் அனுபவங்களே அவரை இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் குறித்து பேசவிடாமல் செய்து விட்டது என எண்ணுகிறேன். மணிரத்னமும் மூன்று மணி நேரத்திற்குள் அடங்குகிற திரைக்கதையாக பொன்னியின் செல்வனை எழுதி வைத்திருப்பதாக சுஜாதா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.
-
இன்னும் ஒரு பெண்
சுஜாதாவின் நாவல்களில் சற்றே வித்தியாசமான பின்னணியை உடைய நாவல் என்று இதனை கூறினால் அது மிகையில்லை. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பேரன் பிறக்குப்போகும் தறுவாயில் உள்ள வயதான ஒருவருக்கு ஏற்படும் இன்னொரு பெண்ணின் மீதான இனக்கவர்ச்சி / காதல் / காமம் / ஆசை ஆகிய இன்னபிற வார்த்தைகளின் கூட்டும், அதனை தன் மனைவி இருக்கும்போது சாதிக்க இயலாது என்பதால் அவளை கொலை செய்யும் முயற்சியும்தான் களம். ஆனால் கதையின் இறுதியில் வரும் twist…
-
நில்லுங்கள் ராஜாவே – sujatha
ஒரு சாதாரணன் தன் உடைமைகளும், சொந்தங்களும், பந்தங்களும் மற்ற யாவரும் தன்னை ஒரு முற்றிலும் அன்னியனாக பாவிப்பதாகவும், இந்த பெரும் குழப்பம் தரும் நிகழ்வுகளினூடே ஒரே ஒரு புதிய முகம் மட்டும் தன்னை “நில்லுங்கள் ராஜாவே” என அழைப்பதாகவும் உரைக்க அவனை விசாரணைக்குட்படுத்தி கணேஷ், வசந்த் ஒரு பெரிய நாட்டின் அதிபரை காப்பாற்றுவது வரை செல்லும் அருமையான thriller நாவல். ஆரம்பத்தின் psycological thriller போன்று ஆரம்பித்து பிறகு புரியாத medical terms பலவற்றை…
