Category: பறவை
-
வானம் பார்த்த பாரத்வாஜம்
வானம் பார்த்து தியானம் செய்யும் இந்தக் கரிச்சான் குருவியைக் கண்டவுடன் தி.ஜானகிராமன் நினைவு வந்து நிதானிக்கிறேன். எப்போதும் மனிதர்கள் பார்க்கிறார்கள் என்ற உணர்வு வந்தாலே பறந்துவிடக்கூடிய பறவை இன்று இத்தனை அருகில் இருந்தும் எழாமல் எங்கோ கவனம் குவித்திருக்கிறது. பார்த்துக்கொண்டே நிற்கிறேன். பட்டுக்கருப்பு, மாம்பூவைத் தின்று கம்மல் குரலில் பாடும் குயில், பிச்சமூர்த்தி, ஆனைச்சாத்தன், ஆண்டாள், பாலுமகேந்திரா, அர்ச்சனா, கு.ப.ரா என்று நினைவுகள் கோத்துக்கோத்து உச்சம் போகும்போது, சட்டென்று குரலெழுப்பிக் கூவியது. ‘நல்ல இருட்டில் வெளிச்சத்தினாலே கோடு…
