Category: சுஜாதா
-
இன்னும் ஒரு பெண்
சுஜாதாவின் நாவல்களில் சற்றே வித்தியாசமான பின்னணியை உடைய நாவல் என்று இதனை கூறினால் அது மிகையில்லை. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பேரன் பிறக்குப்போகும் தறுவாயில் உள்ள வயதான ஒருவருக்கு ஏற்படும் இன்னொரு பெண்ணின் மீதான இனக்கவர்ச்சி / காதல் / காமம் / ஆசை ஆகிய இன்னபிற வார்த்தைகளின் கூட்டும், அதனை தன் மனைவி இருக்கும்போது சாதிக்க இயலாது என்பதால் அவளை கொலை செய்யும் முயற்சியும்தான் களம். ஆனால் கதையின் இறுதியில் வரும் twist…
-
நில்லுங்கள் ராஜாவே – sujatha
ஒரு சாதாரணன் தன் உடைமைகளும், சொந்தங்களும், பந்தங்களும் மற்ற யாவரும் தன்னை ஒரு முற்றிலும் அன்னியனாக பாவிப்பதாகவும், இந்த பெரும் குழப்பம் தரும் நிகழ்வுகளினூடே ஒரே ஒரு புதிய முகம் மட்டும் தன்னை “நில்லுங்கள் ராஜாவே” என அழைப்பதாகவும் உரைக்க அவனை விசாரணைக்குட்படுத்தி கணேஷ், வசந்த் ஒரு பெரிய நாட்டின் அதிபரை காப்பாற்றுவது வரை செல்லும் அருமையான thriller நாவல். ஆரம்பத்தின் psycological thriller போன்று ஆரம்பித்து பிறகு புரியாத medical terms பலவற்றை…
