Category: சினிமா
-
Imtiaz Ali -1
வாழ்க்கையை ஒரு கோழி இறகினை விட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி, நொடிக்கு நொடி முடிவினை, மனதினை மாற்றிக்கொண்டேயிருக்கிற உயர்வகுப்புப் பையன் ஒருவன், ஒரு சிறிய அறைக்குள் இருந்துகொண்டு தனது பெரிய குடும்பத்தினை கட்டிக்காக்கிற ஒரு பஞ்சாபித்தாத்தா, தனது மகன் மனது முதிராமல் செய்துவிட்ட தவறுகளை பெரிதும் அலட்டிக்கொள்ளாது மன்னிக்கிற ஒரு தந்தை இப்படி இம்தியாஸ் அலியின் இரண்டு திரைப்படங்கள், அவரின் ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எல்லாமே எனது மனதுக்கியைந்தன. இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள்…
-
1 அழகி,1 gang & ஸ்ரீராம்ராகவன்
ஸ்ரீராம் ராகவனின் இரண்டு நேர்த்தியான த்ரில்லர்கள் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கான பதிலை எளிமையாக்கிவிடும். இந்தியாவின் சிறந்த இயக்குனர்கள் பெயர்கள் கேட்கப்படும்போது மறக்காமல் SR பெயரை எழுதிச் சென்றிடுவேன். இரண்டுமே எந்த காலத்திலும் reference ஆக வைத்துக்கொள்ளக்கூடிய சுவாரசியமான திரைக்கதைகள். பெரிய நடிகர்கள் இல்லாவிடினும், கமர்ஷியல் சாகசங்கள் இல்லாமலும், அந்தந்த நாட்களில் நடப்பு ட்ரெண்ட்களில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்காமலும் தேர்ந்த திரைப்படங்களை வழங்கும் இயக்குனர்களில் ஸ்ரீராம்ராகவனுக்கும் இடம் உண்டு.
-
BABEL
‘பேபல் திரைப்படத்தின் டிவிடி என்னிடம் இருக்கிறது. இருக்கிறது’, என்கிற பிரயோகம் இருந்தது என்று ஆகிப்போகும் அளவிற்கு அதன் தேய்மானம் குறைந்துகொண்டே போகின்றது. என் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படங்களில் பேபல் ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. அதனைப்பற்றி எழுதும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை என்பதை அறிவேன் ஆயினும் ஆர்வமெனும் பெருநெருப்பினை அணைக்கும் ஒரு சிறுநீர்த்துளியாகவே இதனை எண்ணிக்கொள்வேன்.
-
DD-அடுத்த அடி!
எது நிகழக்கூடாது என்று சென்ற வாரஇறுதியில் நினைத்துக்கொண்டேனோ அது இந்த வாரமும் நிகழ்ந்தேவிட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக தியேட்டரில் வாங்கும் செமத்தியான அடி. என்ன அதிலெல்லாம் பறந்து பறந்து அடிச்சாங்க. இதுல பறக்கறதால ( இறகு) அடிக்கிறாங்க. “தாம்தூம்” க்கும் தொடர்ந்தது. எப்படி இவ்வளவு பணத்தினை வாரியிறைத்து அதன் rush பார்க்கும்போதே தெரிந்துவிடாதா இது முற்றிலும் நிராகரிக்கப்படும் என்று. A worst editing and presentation ever.:( எனக்கு பிடித்த மிகச்சில விஷயங்கள் 1. கங்கனாவின் மொழி அழகு…
-
திருஷ்டிப்பொட்டுகள்
ஏமாற்றமளித்த திரைப்படங்களைப்பற்றி எழுதியிருந்தேன். இப்போது திருப்திப் படுத்திய திரைவரிசை.
-
RACE(2008)
பெரும் திருப்பங்களைக்கொண்ட, யூகிக்க முடியாத சம்பவங்களின் கோர்வைகளை உள்ளடக்கிய, விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடும் எல்லா த்ரில்லர் திரைக்கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் நான்.
-
Couldn’t resist
கடந்த 5-6 மாதங்களாக வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பலவற்றை வேலைப்பளு, பயணங்கள் காரணமாக பார்க்க இயலாமற்போனது. பின்பு மொத்தமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது பார்க்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
-
Welldone James!
ஜேம்ஸ் வசந்தன் ஒரு சிறந்த கிதார் இசைக்கலைஞர் என்பதை அறிந்திருந்தேன். நல்ல சங்கீத ஞானமும் கொண்டவர். முதலில் அவர் வெளியிட்ட “வாசனை” என்கிற இசைத்தொகுப்பு (அதிகமான மேற்கத்திய வாசனை வீசியது!) பரவலான வரவேற்பு பெறாமல் போய்விட்டது. திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதே பழைய வாசனை வீசக்கூடாதே என்ற எண்ணம் இருந்து வந்தது. எண்ணத்திற்கு மாறாக வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்பட இசையமைப்பு குறுவட்டான “சுப்ரமணியபுரம்” சிறந்த பாடல்களை கொண்டிருக்கிறது. “கண்கள் இரண்டால்” என்று…
-
Saawariya (2007)
தஸ்த்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” நாவலை தழுவியது முன்குறிப்பு சாவரியா ஒரு சாதாரண பார்வையாளனுக்காக நிச்சயம் எடுக்கப்படவில்லை. அது அழகியல் நோக்குடன் திரையை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மட்டும்தான். இதனை மிக தெளிவாக புரிந்துகொண்டே திரையரங்கத்திற்கு சென்றால் பிழைக்கலாம். இல்லையென்றால் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. புதுமுகங்களின் காதல் கதை என்றால் நிச்சயம் ஒரு கமர்ஷியல் என்டர்டெயினர் என்ற எண்ணத்தில்தான் எல்லோருமே சென்றோம். ஆனால் இப்படி ஒரு புதிய வடிவத்தை எதிர்ப்பார்க்காத பெரும்பான்மையானோர் பாதியிலேயெ கிளம்பிவிட்டனர். அரங்கம் நிறைந்த காட்சியாக தொடங்கிய…
