Category: குறுங்கதை
-
மனப்புள்ளிக்கோலம்
இந்தக்குகை இன்னும் எத்தனை நீளம் என்று தெரியவில்லை. வாழ்நாள் மொத்தமும் இந்த இருட்டிலேயே கடக்கவேண்டுமோ என்ற பயம் வந்தது. எங்கேயோ நீர்ப்பூச்சிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. புகை வாசனையும், பச்சை நாற்றமும் கலந்து வீசின. அது இன்னும் அதிகரித்தால் சுவாசம் அடைக்குமோ என்ற அச்சமும் வந்தது. அப்போதுதான் அந்தப் புள்ளிகளைக் கண்டேன். பாலே நடன மங்கைகள் போலச் சுழன்று சுழன்று ஆடித்திரிந்து எதிரில் வந்துகொண்டிருந்தன. நிறங்களைப் பற்றிச் சிந்திக்க மனதுக்கு வலுவில்லை. வெண்மையாகவோ, சாம்பல் நிறத்திலோ இருப்பதாக…
-
எடிட்டர்
அவனுக்கு அந்தச் சந்தேகம் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் அமானுஷ்யங்களில் நம்பிக்கை கொண்டவன். பேய்க் கதைகள் எழுதுபவன். அதனால் அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என நம்பினான். விஷயம் இதுதான். தொடர் நாவலின் அன்றன்றைய அத்தியாயங்களை அதிகாலையில் எழுந்துதான் எழுதுவான். தினமும், நள்ளிரவு அலுலக வேலைகள் முடிந்து தூங்கப் போகும் முனபு ஒரு காரியம் செய்வான், கணினியில் புதிதாக ஒரு கோப்பைத் திறந்து அத்தியாய எண்ணை எழுதி, அதன் முதற்சொல்லையோ, இரண்டு வாக்கியங்களையோ, ஒன்றும் தேறவில்லையென்றால் அத்தியாயத்திற்கு…
