Category: எழுத்து
-
கண்ணுக்கெதிரே காளையைச் சந்தித்தல்
எளிய கதைகளை எழுதுவதை விட, கிளாசிக்குகளை, உங்கள் மொழியை, சிந்தனையைச் சவாலுக்கு உட்படுத்துகிற கதைகளை எழுதுங்கள் என்கிறார் சல்மான் ருஷ்டி. இதனை ‘Work Close to the Bull’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பகுதியாகத் தன்னுடைய மாஸ்டர் க்ளாஸில் சொல்லிக்கொடுப்பார். காளைச்சண்டையை மேடையிலிருந்து காண்பதை விட, களத்தில் இறங்கிச் சவாலைச் சந்தித்துப்பார் என்பது உட்பொருள். வெளிவரவிருக்கும் என்னுடைய புதிய fantasy fiction நாவல் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிரியரிடம் முதன்முறையாக விவரிக்கச்சென்றேன். கிட்டத்தட்ட இருபது…
-
வாக்கு, க்ளாக்கு, தாக்கு
எழுத்தாளர் டான் பிரவுனின் (Dan Brown) மாஸ்டர் கிளாஸ் வகுப்பில் சில வருடங்களுக்கு முன்பு இணைந்து கற்றிருக்கிறேன். அதில் ஒரு திரில்லர் நாவல் எழுதுவதற்கான பல சுவாரசியமான தகவல்களையும், நுட்பங்களையும் பகிர்ந்திருந்தார். அதில் நெடுநாள்கள் மனத்தில் நிற்பது இந்த 3C கோட்பாடு. ஒரு வாசகனை நாவலுக்குள் இழுத்து வைத்துக்கொண்டு அவன் திருப்திக்கு விருந்து வைப்பதில் இந்த மூன்று C க்களுக்கும் மிக முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்கிறார். என்பது அவர் சொன்ன மூன்று விஷயங்கள். இதனை எளிமைப்படுத்தி…
-
எழுதிப்படித்தல்
இன்று அதிகாலையில் நான் எழுதிப் படிப்பதாகப் போட்டிருந்த ஒரு வீடியோவைச் சுட்டி என் பள்ளி நண்பர் ஒருவர் ’இன்னும் பேனா பேப்பர்லாம் வச்சு எழுதுறியா? என்று கேட்டிருந்தார். கூடவே,. அப்படி என்னதான் எழுதுவ? எதுக்கு அவ்ளோ நோட். ஏன் இவ்ளோ கலர்ல பேனா? என்றும் துணைக்கேள்விகளை அடுக்கியிருந்தார். எனக்கு அடிப்படையிலேயே எழுதிப்படிக்கும் பழக்கம் பள்ளி நாள்களிலிருந்தே உண்டு. படிப்பதை விட, எழுதினால் மனதில் பதிகிறது என்பதுதான் முதன்மைக் காரணம். அது பின்னாளில் ஆய்வுப்புத்தங்கள், தத்துவப் புத்தகங்களை வாசிக்கும்போதும்…
-
அமியின் ஜெமினி
நான் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்தவன். ஆகவே காடு புகுதல் என்பது தினசரிச் செய்கையாக இருந்தது. அப்போதெல்லாம் சிந்தனை மொத்தத்தையும் விழிகளில், செவிகளில் கொண்டு குவிப்பதற்குப் பயிற்சியளித்திருப்பார்கள். ஏனெனில் திடீரென ஒரு முயல் கடக்கும். சட்டென ஒரு மான் தாவி ஓடும். புலி பாயலாம். கரடி தாக்கலாம். அது வரை பார்த்திராத ஒரு வண்ணப்பறவை பறந்து போகும். இது போன்ற சந்தோஷங்களும், அதிர்ச்சிகளும்தான் வனம் புகுதலின் ஆதாரமே . ஆகவே மொத்தக் கவனத்தையும் விழியில் கொண்டு குவிப்பது…
-
மனப்புள்ளிக்கோலம்
இந்தக்குகை இன்னும் எத்தனை நீளம் என்று தெரியவில்லை. வாழ்நாள் மொத்தமும் இந்த இருட்டிலேயே கடக்கவேண்டுமோ என்ற பயம் வந்தது. எங்கேயோ நீர்ப்பூச்சிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. புகை வாசனையும், பச்சை நாற்றமும் கலந்து வீசின. அது இன்னும் அதிகரித்தால் சுவாசம் அடைக்குமோ என்ற அச்சமும் வந்தது. அப்போதுதான் அந்தப் புள்ளிகளைக் கண்டேன். பாலே நடன மங்கைகள் போலச் சுழன்று சுழன்று ஆடித்திரிந்து எதிரில் வந்துகொண்டிருந்தன. நிறங்களைப் பற்றிச் சிந்திக்க மனதுக்கு வலுவில்லை. வெண்மையாகவோ, சாம்பல் நிறத்திலோ இருப்பதாக…
-
சான் அகாடமி பள்ளியில் உரை
இன்று தாம்பரம் சான் அகாடமி பள்ளியில் reading for development என்னும் தலைப்பில் ஓர் உரையாற்ற அழைத்திருந்தார்கள். பாடப் புத்தகங்கள் தாண்டி, மாணவர்களுக்கு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவது, அதன் தேவையை அவர்களுக்குப் புரியவைப்பது, அதனால் ஏற்படும் நீண்ட காலப்பயன்கள் பற்றி விளக்கமாகச் சொல்வது என்பது ஏற்பாடு. இதனை முழுக்க என்னுடைய பேச்சு, ப்ரசண்டேஷனாக மட்டும் இல்லாமல் எல்லோரும் பங்குபெறும் இயல்பான கலந்துரையாடலாக மாற்றி அமைத்துக்கொண்டு உரையாடினேன். கிட்டத்தட்ட ஐம்பது சதவீதக் குழந்தைகள் ஏற்கனவே பள்ளிப்பாடம் தாண்டிய வாசிப்புக்கு…
-
கையில் மலர்ந்த செளகந்திகம்
[2024ம் வருடம் எழுத்தில் என்ன செய்தேன் என்ற தலைப்பில் எழுதிய ஆண்டறிக்கை. அந்த வருடத்தின் கடைசி வாரத்தில் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் பிரசுரமானது] இந்த வருடத்தின் (2024) முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது. அமீரகத்தில்,…
-
G இன்றி அமையாது உலகு
* கூகுள் என்ற சொல்லுக்குப் பொருள் உள்ளதா? * ‘இணையத்தில் தேடு` என்ற பதத்தைக் ‘கூகுள் செய்’ என்றே மாற்றியமைத்தது காலமா? அல்லது கார்ப்பரேட் தந்திரமா? * கல்லூரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட கூகுள் தேடுபொறி எப்படி இத்தனை பெரிய நிறுவனமாக வளர்ந்தது * கூகுளின் சூத்திரதாரிகள் யார்? * கார் கேரேஜில் ஆரம்பிக்கப்பட்டது ஏன்? * அந்தக் கார் கேரேஜை வாடகைக்குக் கொடுத்தவர் இன்று கூகுளின் உயரதிகாரிகளில் ஒருவர் என்பது உண்மையா? * ஆண்ட்ராய்டை (android) ஏன்…
