Category: உரை
-
நாவல்கள் ஏன்? எதற்கு?- உரை
கடந்த சனிக்கிழமை (14-03-2026) மாலை ஸ்வீடன் நாட்டின் வேஸ்தரஸ் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்திருந்த உரையாடல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசினேன். இந்த அமர்வு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் பகுதியில் நாவல்கள் ஏன் எதற்கு என்ற தலைப்பில் உரையாற்றினேன். இரண்டாவது அமர்வில் கிளாசிக் நாவல்கள் வரிசையில் 13 தமிழ் நாவல்களை அறிமுகப்படுத்தினேன். முதல் பகுதியில் நாவல் என்றால் என்ன? அந்தச் சொல் எந்த மொழியிலிருந்து கிளைத்து வந்தது? நாவல்கள் உருவான வரலாறு என்ன? நாவல்களுக்கு முன்பு என்ன இருந்தது?…
