Category: இலக்கியம்
-
கடவுள் தொடங்கிய இடம்
ஜகமே தந்திரம் திரைப்படம் ஃபோகஸே இல்லாமல் சுற்றித்திரிந்து தந்த எரிச்சலை மறக்க, அதே திரைப்படத்தில் அகதிகள் நாடு விட்டு நாடும் செல்லும் காட்சிகள் நினைவுபடுத்திய “கடவுள் தொடங்கிய இடம்” நாவலை இந்த நீண்ட வாரயிறுதியில் மீண்டும் வாசித்தேன். 8 வருடங்களுக்கு முன்னால் வாராவாரம் ஆனந்தவிகடனில் வாசித்தபோது விட்ட நிறைய நல்ல தருணங்களை, புத்தகமாகப் படித்தபோது நன்கு புரிந்து, அனுபவிக்க முடிந்தது. நிஷாந்த் எனும் சிறுவன் “இயக்கத்தில்” சேர்ந்து விடக்கூடாது என்ற பெற்றோர்களின் அக்கறையினால் ஏஜெண்டிடம் பணம் கட்டி…
-
காணவில்லை – 2
காணவில்லை – 1 1. கவிஞர் சங்கரராமசுப்ரமணியன் தனது “சிங்கத்துக்கு பல் துலக்கும் வேலை” என்கிற கவிதை மூலமாக சிற்றிதழ்களில் பிரபலமானவர். (அக்கவிதையினால் தனது வேலையை இழந்தார் என்றும் சொல்ல கேள்விப்பட்டதுண்டு.) நன்கு கணினி அலுவலக ஊழியர் போல உடை அணிந்திருப்பார். கடைசியாக ராஜ் டிவியில் ஊர்வசி நடத்திய ஒரு நிகழ்ச்சியின்போது இவரின் பெயரை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். கவிஞர் சங்கரராமசுப்ரமணியன் அவர்களை காணவில்லை.
