BOOKS

மயல் (நாவல்)

அல்லல் பட்டு ஆற்றாது அழுத ஒரு பெண்ணின் கண்ணீர் குடும்பச் சாபமாகத் துரத்துகிறது. தீர்வு தேடிப்போகும்போது, உலகின் உன்னத இனிப்பு ஒன்றைத் தேடிக்கண்டுபிடிப்பதுதான் தன் வாழ்க்கையின் நோக்கம் என்று கண்டறிகிறான் நாயகன்.

G இன்றி அமையாது உலகு

இந்த அதி நவீன டிஜிடல் காலத்தில் கூகுளை ‘நீயின்றி அமையாது உலகு’ என்று சொல்வதில் ஆழ்ந்த பொருளுள்ளது. அது வளர்ந்து, வேர்கொண்டு இன்று செழித்து நிலைத்திருக்கும் கதையை விரிவாகச் சொல்கிறது இப்புத்தகம்.

நிஷாகந்தி

அமானுஷ்யம், மர்மம் என்ற இரு சரடுகளின் இறுக்கமான பின்னணியில் கட்டப்பட்ட பன்னிரண்டு கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. வழக்கமான தமிழ் மர்மக்கதைகளின் கதைசொல்லல் பாணியிலிருந்து விலகி செவ்வியல் பாணியில் எழுதப்பட்டுள்ளன.

செந்தாழம்பூவில்

மலை, மனிதர்கள், மகத்தான இசை என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ரசனைக்கட்டுரைகள் இவை. பால்ய நாளில் என்னோடு பழகிய மனிதர்களின் நினைவை அந்தக்காலப்பாடல்களைக்கொண்டு நினைவு வைத்திருக்கிறேன். அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.