நாவல்கள் ஏன்? எதற்கு?- உரை

கடந்த சனிக்கிழமை (14-03-2026) மாலை ஸ்வீடன் நாட்டின் வேஸ்தரஸ் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்திருந்த உரையாடல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசினேன். இந்த அமர்வு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் பகுதியில் நாவல்கள் ஏன் எதற்கு என்ற தலைப்பில் உரையாற்றினேன். இரண்டாவது அமர்வில் கிளாசிக் நாவல்கள் வரிசையில் 13 தமிழ் நாவல்களை அறிமுகப்படுத்தினேன்.

முதல் பகுதியில் நாவல் என்றால் என்ன? அந்தச் சொல் எந்த மொழியிலிருந்து கிளைத்து வந்தது? நாவல்கள் உருவான வரலாறு என்ன? நாவல்களுக்கு முன்பு என்ன இருந்தது? தமிழில் நாவல்கள் வளர்ந்த வரலாறு. தொடர்கதைகளுக்கும் நாவல்களுக்கும் உள்ள வேறுபாடு. நாவல் நமக்கு என்ன செய்யும்? ஏன் நாவல்கள் படிக்க வேண்டும் என்ற தலைப்புகளை எடுத்துக்கொண்டு விரிவாக விளக்கினேன்.

இரண்டாவது அமர்வில் கிளாசிக் நாவல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தினேன். அதனை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டேன். படிக்க எளிதான சிறிய நாவல்கள். படிக்க எளிதான பெரிய நாவல்கள். உள்ளே புகக் கடினமானவை ஆனால் படித்து முடித்த பின் நினைவில் நிற்பவை என மூன்றாக வகுத்துக்கொண்டேன்.இந்தப்பிரிவுகளில் நாவல்கள், அதன் களம், உள்ளடக்கம், மொழி, அமைப்பு, எப்படி அது கிளாசிக்காகிறது என்று விரிவாக விளக்கினேன்.

இந்த உரைக்குப் பின்னர், வாசகர்களின் கேள்வி பதில் பகுதியும் இடம்பெற்றது. வாசிப்பு, எழுத்து, நேர மேலாண்மை, எழுத்தில் கிளாசிக் தன்மை, வாசிக்கும்போது ஏற்படும் கவனச்சிதறல் உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தேன். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிறைவான உரையாடலாக அமைந்தது.

Leave a comment