தவப்பத்து

எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகம் எனக்கு ஒரு புனித நூல். அகராதிக்கு அடுத்தபடியாக என் மேசையில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இரண்டாவது புத்தகம் அது. அதன் ஒவ்வொரு சொல்லையும் கிட்டத்தட்ட மனப்பாடம் செய்திருக்கிறேன். அதில்தான் இந்தத்

 தவப்பத்து வருகிறது. இது ஆசிரியர் கொடுத்த தலைப்பல்ல. நான் எனக்காக வைத்துக்கொண்டது. இது புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயமான ஜென்

 ராஜா வில் வருகிற ஆரம்பப் பத்திகள். (அதற்குப் பிறகு அந்த அத்தியாயம் பேசும் இன்னொரு உன்னதம் இருக்கிறது. அதைத் தவறவிடாதீர்கள்)

இந்தப் பத்தும் என் அன்றாடங்களை ஒழுங்கு செய்வன. காத்திருப்பு,  கவனம், ஆர்வம், அறிவு, தொடர்ந்த ஈடுபாடு, சோர்வின்மை, சரியான பயன்பாடு, விழிப்புணர்வு, மோசமானவற்றை விலக்குதல், உன்னதம் நோக்கிப் பயணித்தல் என்பதை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன். விழிப்போடு இதனைத்

 தினசரிச் செயல்களில் செலுத்திப் பயன்பெறும்போது, உன்னதம் நோக்கி நான் ஓர் அடியை எடுத்துவைத்துவிட்டதாக உணர்வேன். ஏதேனும் ஒன்று குறையும்போது அதைத் தீர்க்க முயற்சி செய்கிறேன். அன்று பத்தில் ஒன்றில் குறையிருந்தால், அடுத்த நாளில் அதை நிறைவேற்றத்

 தீவிரம் காட்டுகிறேன். 

தொடர்ந்து பயன்படுத்தும்போது இவை ஒவ்வொன்றும் தன்னளவில் தொடர்புடையவையே என்பதை உணர்ந்துகொண்டேன். அன்றாடங்கள் இதன் கீழ் வந்துவிட்டபிறகு வாழ்வின் உன்னதத்தை நோக்கிய நமது பயணம் இன்னும் செழுமை பெற்றிருக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

(PAEKREAAAE என்ற பொருளற்ற ஆங்கிலப்பயன்பாடுதான் இந்தத்

 தத்துவப்பத்தை எனக்குள் இறுக்க நான் உருவாக்கி வைத்திருக்கும் ஒற்றை மந்திரம். நிறையும் ஒவ்வொரு செயலினுள்ளும்

 இந்தப் பத்தும் இருக்கிறதா என்பதைச் சோதிக்க இது ஒரு குறுக்கு வழி )