Month: October 2025
-
தேவதைகள் தரும் ரோஜாக்கொத்து
நேற்று வாசக நண்பர் சுரேஷ் அமாசி மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதன் கடைசி வரியைப் படித்து நெடு நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். (உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தினம் தினம் ஏதாச்சும் தேவதை வந்து ரோசாப்பூ கொடுத்து எழுப்புதா). நிதர்சனம் என்னவென்றால், இன்றைய தேதியில் பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் எல்லோரையும் ,காலைப்பொழுதை வெறுப்பவர்களாகத்தான் மாற்றி வைத்திருக்கிறது காலம். என் வேலை நேரம் அமெரிக்க நேரம் சார்ந்தது (EST). பெரும்பாலும் என் நாள் நள்ளிரவில் / அதிகாலையில்தான் நிறைவுறும். பணி நேரம்…
-
விழி, எழு, ஓடு
விழி, எழு, ஓடு என்பதுதான் மானுடம் கண்ட மூன்று மகத்தான வார்த்தைகள் என நம்புகிறேன். நம் அன்றாடங்களில் குழப்பங்களுக்கும், வினாக்களுக்கும், தோற்ற மயக்கங்களுக்கும், துன்பங்களுக்கும் குறைவேதுமில்லாத இடமுண்டு. இவை அனைத்துமே நம்மை வீழ்த்தக் காத்திருக்கும் சிற்றரக்கர்கள். உட்கார், உறங்கு, போதும், இன்னும் சிறிது நேரம் அலைப்பேசி பார் என்று சிற்றின்பங்களில் தள்ளிவிடும் இனிப்புக்கரங்கள் கொண்ட அவுணன். இப்படிப்பட்ட தருணங்களிலெல்லாம், விழு, எழு, ஓடு என்ற மூன்றோடு அலைந்து திரி என்ற நான்காவதாக ஒன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். இது தீர்வுக்கான…
-
மயல் – முன்னோட்டம்
என்னுடைய முதல் நாவல் ‘மயல்’ , வெகு விரைவில் வெளிவரவிருக்கிறது. அதற்கென தயாரிக்கப்பட்ட டீசர் இது. சென்ற மாதம் விமரிசையாக நடந்த ஓர் இணைய நிகழ்வில் பதிப்பாளர்கள், ஸீரோ டிகிரி ராம்ஜி மற்றும் காயத்ரி ஆகியோர் இதனை வெளியிட்டனர். ஆசிரியர் பா.ரா தலைமையில் நடந்த விழாவில், ஊடகவியலாளர் ஆர்.வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரளான வாசகர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். டீசர் உங்கள் பார்வைக்கு இங்கே.
-
மயல் மலர்ந்த காதை – 2
நாவலின் கருவும், களமும் உருவான பிறகு, ஆசிரியருக்கு அனுப்பிய ஒலிக்குறிப்பை என் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினேன். வாசிப்பிலும், எழுத்திலும் சிறந்த என் நெருங்கிய வட்டம் அது. இதைக்கேட்டதும் பதறினார்கள். இந்த நாவலில் காமம் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் இருந்தது. அது சரியாக வருமா என்று அஞ்சினார்கள். அதற்கு முன்பு நான் எழுதத் தொடங்கிய கிளாசிக் நாவல் எனக்கு எழுத்துவட்டத்தில் மிகச்சிறந்த அறிமுகத்தை எனக்கு வழங்கும் என்று நம்பியிருந்தார்கள். முதலில் வரும் நாவலாக இதுவா அமைய வேண்டும்…
-
மயல் மலர்ந்த காதை – 1
இந்த வருடம் வேறு ஒரு பெரிய நாவலைத் திட்டமிட்டருந்தேன். பெரிய கேன்வாஸில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஃபேண்டஸி ஃபிக்ஷன் கதையாக அது இருந்தது. அதைப் பற்றி ஆசிரியரிடம் பேசி, விவாதித்து, எழுதவும் தொடங்கினேன். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றை எழுதிக்கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் நேரில் அழைத்தார். ‘இதை தமிழகத்தில் வேறு எந்த பத்திரிகை ஆசிரியரிடம் கொடுத்தாலும் உடனே பிரசுரம் செய்வார். சம்பவங்கள், ஸ்ட்ரக்ச்சர் எல்லாம் நன்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த நாவலை மொழியால் இன்னும்…
