Month: September 2025
-
முதற்சொல்
ஜேம்ஸ் பேட்டர்சன் தன்னுடைய எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் ‘முதல் வரிகள்’ என்று ஒரு தனி அத்தியாயமே வைத்திருப்பார். எப்படி முதல் வரியிலிருந்தே கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்ல வேண்டும் என்று விரிவாக அதில் விளக்குவார். (அபிநயங்களோடு அவர் வகுப்பெடுப்பதைக் காணக் கண்கோடி வேண்டும்) வாசகனுக்கு மட்டுமல்ல இந்த முதல் வரியும் முதற்சொல்லும் வந்து சேருவது ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே மிக முக்கியமான தருணம். அது வந்துவிட்டபிறகு மனிதனாக இருக்கும் அவன் கலைஞன் என்ற சிறகுகள் அணிவிக்கப்படுகிறான். பின்பு அவன் செல்லும்…
-
அகப்பேய் அகவல்
ஓடிவரும் மான்குட்டிகள் மூன்று, எந்தக் காரணமும் இன்றி திடீரென்று தண்ணீரில் குதிக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார் பரத்வாஜ் ரங்கன், அதிலேயே ‘இப்படித்தான் introverts சூப்பர் மார்க்கெட்டில் எதிரில் யாரேனும் வந்தால் சட்டெனப் பாதை மாறி ஒளிந்துகொள்வார்கள்’ என்ற குறிப்பையும் சேர்த்திருந்தார். சக இண்ட்ரோவெர்ட் நட்பு ஒருவர் அதனைப் பகிர்ந்திருந்தார். இருவரும் கண்களில் நீர் வரும் ஸ்மைலியைப் பகிர்ந்து சிரித்துக் கொண்டோம். உண்மையிலேயே இந்த அகக்கூட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் இச்சையைத் தவிர்க்க முடியாதவர்களின் இண்ட்ரோவெர்ட் உலகம் பிரத்தியேகமானது. நான்…
-
கண்ணுக்கெதிரே காளையைச் சந்தித்தல்
எளிய கதைகளை எழுதுவதை விட, கிளாசிக்குகளை, உங்கள் மொழியை, சிந்தனையைச் சவாலுக்கு உட்படுத்துகிற கதைகளை எழுதுங்கள் என்கிறார் சல்மான் ருஷ்டி. இதனை ‘Work Close to the Bull’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பகுதியாகத் தன்னுடைய மாஸ்டர் க்ளாஸில் சொல்லிக்கொடுப்பார். காளைச்சண்டையை மேடையிலிருந்து காண்பதை விட, களத்தில் இறங்கிச் சவாலைச் சந்தித்துப்பார் என்பது உட்பொருள். வெளிவரவிருக்கும் என்னுடைய புதிய fantasy fiction நாவல் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிரியரிடம் முதன்முறையாக விவரிக்கச்சென்றேன். கிட்டத்தட்ட இருபது…
-
மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்
[திரு. ஜெயக்குமார் பரத்வாஜ் வெள்ளிமலையில் நடத்திய ஆலயக்கலை வகுப்பு பற்றிய கட்டுரை] தடுத்தாட்கொண்ட நாதர் மீதான சுந்தரர் தேவாரத்தோடு திரு. ஜெயக்குமார் இந்த ஆலயக்கலை வகுப்பை ஆரம்பித்தார். பித்தா பெருமானே என அவர் குரலுயர்ந்த அந்தத் தருணம், பலவிதங்களில் அலைந்து கொண்டிருந்த சிந்தனையையும், மனத்தையும் தடுத்தாட்கொண்டது. அடுத்த மூன்று நாள்களும் எங்களை அறிவால், பக்தியால். பாரம்பரியப் பெருமைகளால், ஆலயக்கோட்பாடுகளால், சிற்ப மரபால், இசையால், நகைச்சுவையால் மற்ற எந்த உலகாதீயக் கோட்பாடுகளுக்கும் கவனம் கொண்டு செல்லாமல் ஆட்கொண்டிருந்தார். ஓர்…
