Month: August 2025
-
மழை – ஓர் ஓவியம், ஒரு சினிமாக்காட்சி, ஒரு கவிதை
மழை வரும் முஸ்தீபுகள் தெரிந்ததால், இன்று அதிகாலையிலேயே நடையைத் தொடங்கினேன். ஒரு சுற்று நிறைவதற்குள்ளாகவே வலித்துப் பெருகிப் பொழிந்தது. உடனே வீட்டிற்குச் சென்றுவிடாமல் மழை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். சென்ற வாரம் உயர்நீதிமன்றச்சாலையில் பூந்தூவலாய்ப் பொழிந்த தூறலில் மகிழ்வோடு நனைந்தது. சென்ற மாதம் மலையேற்றம் சென்றபோது போர்த்திமந்து அணையின் மேல் ஒதுங்க இடமின்றிக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மழையில் நனைந்தபடியே நடந்த நினைவு . அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் பழனி மலை அடிவாரத்தில் காவியணிந்த…
-
வாக்கு, க்ளாக்கு, தாக்கு
எழுத்தாளர் டான் பிரவுனின் (Dan Brown) மாஸ்டர் கிளாஸ் வகுப்பில் சில வருடங்களுக்கு முன்பு இணைந்து கற்றிருக்கிறேன். அதில் ஒரு திரில்லர் நாவல் எழுதுவதற்கான பல சுவாரசியமான தகவல்களையும், நுட்பங்களையும் பகிர்ந்திருந்தார். அதில் நெடுநாள்கள் மனத்தில் நிற்பது இந்த 3C கோட்பாடு. ஒரு வாசகனை நாவலுக்குள் இழுத்து வைத்துக்கொண்டு அவன் திருப்திக்கு விருந்து வைப்பதில் இந்த மூன்று C க்களுக்கும் மிக முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்கிறார். என்பது அவர் சொன்ன மூன்று விஷயங்கள். இதனை எளிமைப்படுத்தி…
-
எழுதிப்படித்தல்
இன்று அதிகாலையில் நான் எழுதிப் படிப்பதாகப் போட்டிருந்த ஒரு வீடியோவைச் சுட்டி என் பள்ளி நண்பர் ஒருவர் ’இன்னும் பேனா பேப்பர்லாம் வச்சு எழுதுறியா? என்று கேட்டிருந்தார். கூடவே,. அப்படி என்னதான் எழுதுவ? எதுக்கு அவ்ளோ நோட். ஏன் இவ்ளோ கலர்ல பேனா? என்றும் துணைக்கேள்விகளை அடுக்கியிருந்தார். எனக்கு அடிப்படையிலேயே எழுதிப்படிக்கும் பழக்கம் பள்ளி நாள்களிலிருந்தே உண்டு. படிப்பதை விட, எழுதினால் மனதில் பதிகிறது என்பதுதான் முதன்மைக் காரணம். அது பின்னாளில் ஆய்வுப்புத்தங்கள், தத்துவப் புத்தகங்களை வாசிக்கும்போதும்…
-
வானம் பார்த்த பாரத்வாஜம்
வானம் பார்த்து தியானம் செய்யும் இந்தக் கரிச்சான் குருவியைக் கண்டவுடன் தி.ஜானகிராமன் நினைவு வந்து நிதானிக்கிறேன். எப்போதும் மனிதர்கள் பார்க்கிறார்கள் என்ற உணர்வு வந்தாலே பறந்துவிடக்கூடிய பறவை இன்று இத்தனை அருகில் இருந்தும் எழாமல் எங்கோ கவனம் குவித்திருக்கிறது. பார்த்துக்கொண்டே நிற்கிறேன். பட்டுக்கருப்பு, மாம்பூவைத் தின்று கம்மல் குரலில் பாடும் குயில், பிச்சமூர்த்தி, ஆனைச்சாத்தன், ஆண்டாள், பாலுமகேந்திரா, அர்ச்சனா, கு.ப.ரா என்று நினைவுகள் கோத்துக்கோத்து உச்சம் போகும்போது, சட்டென்று குரலெழுப்பிக் கூவியது. ‘நல்ல இருட்டில் வெளிச்சத்தினாலே கோடு…
-
அமியின் ஜெமினி
நான் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்ந்தவன். ஆகவே காடு புகுதல் என்பது தினசரிச் செய்கையாக இருந்தது. அப்போதெல்லாம் சிந்தனை மொத்தத்தையும் விழிகளில், செவிகளில் கொண்டு குவிப்பதற்குப் பயிற்சியளித்திருப்பார்கள். ஏனெனில் திடீரென ஒரு முயல் கடக்கும். சட்டென ஒரு மான் தாவி ஓடும். புலி பாயலாம். கரடி தாக்கலாம். அது வரை பார்த்திராத ஒரு வண்ணப்பறவை பறந்து போகும். இது போன்ற சந்தோஷங்களும், அதிர்ச்சிகளும்தான் வனம் புகுதலின் ஆதாரமே . ஆகவே மொத்தக் கவனத்தையும் விழியில் கொண்டு குவிப்பது…
