Month: May 2025
-
எடிட்டர்
அவனுக்கு அந்தச் சந்தேகம் வந்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் அமானுஷ்யங்களில் நம்பிக்கை கொண்டவன். பேய்க் கதைகள் எழுதுபவன். அதனால் அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என நம்பினான். விஷயம் இதுதான். தொடர் நாவலின் அன்றன்றைய அத்தியாயங்களை அதிகாலையில் எழுந்துதான் எழுதுவான். தினமும், நள்ளிரவு அலுலக வேலைகள் முடிந்து தூங்கப் போகும் முனபு ஒரு காரியம் செய்வான், கணினியில் புதிதாக ஒரு கோப்பைத் திறந்து அத்தியாய எண்ணை எழுதி, அதன் முதற்சொல்லையோ, இரண்டு வாக்கியங்களையோ, ஒன்றும் தேறவில்லையென்றால் அத்தியாயத்திற்கு…
