Month: December 2023
-
ராஜதரிசனம்
வேதமந்திரங்களாலும், வாசனை திரவியங்களாலும், யுகம் யுகமாய் மலர்ந்த மலர்களாலும், முற்றிலும் தீர்க்கமான ஆசாரங்களாலும் மெருகேற்றப்பட்ட பேரதிர்வு கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு கோவில் கருவறை போலிருந்தது அந்த இடத்தின் அதிர்வு. பன்னெடுங்காலத்திற்கு முன்பு முதன்முதலில் நுகர்ந்த காட்டு நிஷாகந்தியின் மணத்தை இன்றளவும் என்னால் மறு நினைவாக மீட்டெடுத்து அது இன்னவென்று சொல்லிவிடமுடியாத தத்தளிப்பு இருக்கிறது. அதே போன்ற ஒரு நறுமணம் அந்த இடத்தில் முற்றிலும் பல்கிப்பெருகியிருக்கிறது. ஏற்கனவே தயக்கத்தாலும், பேரார்வத்தாலும் நடுங்கியிருந்த மனது அந்த மோனநிலைக்கு…
