Month: October 2023
-
நீலகண்டம் – சிறுகதை

(அக்டோபர் 1 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளியானது) குன்னூருக்குச் செல்லும் பிரதானச்சாலையிலிருந்து விலகி, ஒரு ஒற்றையடிப்பாதையில் கார் சற்றே குலுங்கித் திரும்பியபோது தூக்கத்திலிருந்து விழித்தேன். மழைச்சாரல் நனைத்த ஒரு குறுகிய புற்பாதை அது. இருபுறமும் நெடிய மரங்கள் வளர்ந்து மழைக் குளுமையை இரட்டிப்பாக்கிக்கொண்டிருந்தன. ஸ்வெட்டர் போட்டிருந்தும் குளிர் தாக்கியது. சற்று நகர்ந்து டிரைவ் செய்துகொண்டிருந்த அவன் தோளில் சாய்ந்துகொண்டேன். ”மழைப்பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே” என்று ஸ்பீக்கரில் வழிந்துகொண்டிருந்த பாடல், இயல்பாகவே அவன் நெருக்கத்தை வேண்டியது. சற்றுத்தள்ளி…
