Month: June 2023
-
அக்கமாதேவியின் மல்லிகார்ஜூன தரிசனம்
பல நல்ல விஷயங்கள் மிகத் தாமதமாகத்தான் வந்து சேர்கின்றன. அப்படி வந்து சேர்ந்தனவற்றுள் ஒன்று இந்த வசனகவிதையும், பாடலும். பண்டிட் வெங்கடேஷின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தப்பாடலும் எழுந்துவந்தது . கன்னடத்தில் இருந்தாலும், ஒரு வசன கவிதை போல மிக நேர்த்தியாக இருந்தது. தேடிப்பார்த்தபோது அது அக்கமாதேவி எழுதியது என்று தெரிந்தது. அக்கமாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்துறவி – கவிஞர். ஸ்ரீசைலத்தில் கோவில் கொண்டுள்ள மல்லிகார்ஜூனர் எனும் சிவ வடிவை தன் கணவராகவே கருதி அவர் மீது…
-
வாரணத்தேடல் – உபநயனக்காதை 1
எங்க வீட்டு விழாவை திட்டமிட்டு நடத்தினதுல ஏகப்பட்ட அனுபவங்கள். அதுல சுவாரசியமான ஒண்ணு இது. என் தங்கை திருமணம் ஸ்ரீரங்கத்துல நடந்தப்ப, அப்பா ஊர்வலத்துக்கு யானை வேணும்னு சொன்னாங்க. ஸ்ரீரங்கத்துல யானைகளுக்கு பஞ்சமில்ல. சில மணி நேரங்கள்ளயே ஒரு சிறுதொகைக்கு பேசி முடிவு பண்ணினோம். இப்ப அதே ஞாபகத்துல பையன் விழாவுக்கும் யானை கொண்டுவரலாம்னு சொல்லிட்டதால, கேட்டரர்கிட்டதான் முதல்ல பேசினேன். அவர் அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விழாவுக்கு கோவிடுக்கு முன்ன கொண்டு வந்ததாவும், 65000 ஆச்சுன்னும்…
