Month: October 2021
-
நிஷாகந்தியின் குரல்
என் மனதுக்கு மிக நெருக்கமான “நித்திரை அழகியின் நிஷாகந்திப்பூ” நெடுங்கதைக்கு இது நாள் வரை என் குரல்தான் அடையாளம். என் குரல்வடிவில்தான் அதன் பாத்திரங்களை மனதுக்குள் பேசவிட்டு எழுதினேன். படித்தவர்களுக்கும் என் குரல்தான் அதில் பரிச்சியமாய் ஒலித்திருக்கும். இன்று முதல் அதற்கு என்னைவிட பன்மடங்கு சிறப்பான மற்றுமொரு அடையாளமாக திருமதி. Fathima Babu அவர்களின் குரலும் சேர்ந்திருக்கிறது. இதனை அவர்கள் வாசித்துமுடித்தபோது இந்தக்கதை வாசித்தவர்களுக்கு கிடைத்த “haunting” அனுபவம் இன்னும் சில மடங்குகள் அதிகமாக கேட்டவர்களுக்கும் கிடைத்தது.…
-
பல்லாவரம் ரிட்டர்னும், சுகந்தமாலினியும்:
ஒரு மலைக்கிராமத்தில் இயற்கையும்,அமைதியும் சூழ வாழ்ந்த எனக்கு, பொருள்தேடி சென்னை வந்த முதல் சில மாதங்கள் கொடுத்த அலைதலையும், அயர்ச்சியையும் மறக்கவே இயலாது. இரைச்சலும், நெரிசலும், வியர்வையும், அழுக்குமென ஏதோ ஒரு வேற்றுக்கிரகத்தில் தண்டனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட கைதியென உணர்ந்த ஆரம்ப நாட்கள் அவை. ஏற்கனவே நிரம்பிவிட்ட ஒரு பெரும்துணிப்பொதியை அழுத்தி அழுத்தி மேலும் துணிகளைச்சேர்ப்பதுபோல, காலை நேரப்பேருந்துகளில் பெருங்கூட்டத்தினூடே ஏறி, நுழைந்து, கூட்டத்தாலேயே நகர்த்தப்பட்டு வியர்வை மழையில் நனைந்து, கசக்கித்தூக்கியெறிந்த காகிதம் போல அலுவலகம் வந்து சேரும்…
-
உயிர்மை 200வது இதழ்
உயிர்மையின் 200வது இதழ் சற்று தாமதமாக நேற்றுதான் வந்து சேர்ந்தது. வெளிவந்த முதல் இதழைக்காத்திருந்து வாங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட 5 வருடங்கள் தொடர்ந்து வீட்டுக்கு வருவிக்கப்பட்டு, சில மாதங்கள் இடைவெளிவிட்டு துபாய்க்கு அனுப்பப்பட்டு படித்து ருசித்த அனுபவங்களெல்லாம் இருக்கின்றன. இடையில் முற்றிலும் சிறுகதைகள் , சூழியல் கட்டுரைகள் துறந்து, தரம் குன்றி, முழுக்க அரசியல் சார்பிதழாகிப்போனபோது படிப்பதை நிறுத்தினேன். இப்போது மீண்டும் முதலிதழின் அதே வாசனையோடு, காத்திரத்தோடு, நற்கலைஞர்களின் நல்ல படைப்புகளோடு சுவாரசியமான இதழாக வந்திருக்கிறது. அவசியம் வாசித்து…
