Month: August 2021
-
இரண்டு தாலிக்காட்சிகள்
திருமணமாகி மனைவிக்கு துபாய் வந்த புதிதில் மெடிகல் டெஸ்ட் எடுப்பதற்காக நாலேட்ஜ் வில்லேஜில் (Knowledge village) ல் இருக்கும் க்ளீனிக்குக்கு கூட்டிச்சென்றிருந்தேன். புதிய இடம், புதிய நாடு, மொழி போதாமை போன்ற கவலைகளால் ஏற்கனவே மிரட்சியாக இருந்த அவரை சற்று பதவுசாகத்தான் ஒவ்வொரு விஷயமாகப்பழக்கிக்கொண்டிருந்தேன். இந்த மெடிகல் டெஸ்ட் எடுக்கச்சென்ற இடத்தில் எக்ஸ்-ரே வுக்கான அறையின் வெளியே காத்த்துக்கொண்டிருந்த சில நிமிடங்களில் கிட்டத்தட்ட கலங்கிய விழிகளுடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தார். என்னவோ ஏதோ என்று…
-
குமாஸ்தா பணியும், எரிச்சலும்
சிறிய வயதிலிருந்தே குமாஸ்தா பணியில் இருப்பவர்களுக்கு கூடேயே இருக்கும் ஒருவித எரிச்சலை பார்த்தே வளர்ந்திருக்கிறேன். அரசுப்பணியில் இருப்பார்கள், நல்ல சம்பளம் இருக்கும், கடினமான பணி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாத, புதிதாக ஒன்றை உருவாக்குகிற கிரியேட்டிவ் பணிகளாகவும் இருக்காது. ஆனால் பணி சார்ந்து எரிச்சல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நிறைய யோசித்திருக்கிறேன் ஏன் இந்தப்பணிக்கு இவ்வளாவு எரிச்சலென்று. புதிரான பகுதியாகவே இருந்தது இது நாள் வரைக்கும். கடந்த இரு நாட்களாக அலுவலகத்தின் இப்போதிருக்கும் ஒரு ப்ராஜக்டின் உரிமையாளருக்கு அவருடைய கனடா…
-
ஒரு பால்ய நதிக்கரை
ஒவ்வொரு வருடமும் தவறாது மேலெழுந்து வருகிறது இப்புகைப்படம். பால்யத்தின் மகிழ்வு மிகு இத்தருணத்தைப்பற்றி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் என்றும் தீரா மகிழ்வையும், குதூகலத்தையும், எல்லா அரும்பெருஞ்செயல்களை விடவும் வாழ்வில் இத்தருணம் விஞ்சி நிற்பதையும் நினைந்து நினைந்து மகிழவும், வியக்கவும் நேரமும் வார்த்தைகளும் இருந்துகொண்டே இருக்கிறது. அதோ அந்த தூரமலை, அந்தப்புல்வெளி, கூடாரம், அங்கே கூடி நிற்கும் என் பள்ளித்தோழர், தோழியர், அண்மைப்பூங்கா, அந்தச்சாலை இன்னும் எல்லாமும் அப்படியே அங்கே இருக்கின்றன என்னைப்போலவே இந்தத்தருணத்தைப்பார்த்து…
