Month: October 2018
-
சுகந்தமாலினி
”கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பதுபோல், உன்னோடு வாழ்ந்திருக்க சாமி சொன்னதய்யா” என்ற பாடல் வரிகள் அதிகாலையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து மேலெழுந்து வந்து அழைத்தபடியே இருக்கின்றன. “இனம்புரியாத ஆழ்மனக்கிறுக்கு இந்தப்பாட்டு மேல எனக்கு, பவதாவோட குரல் இந்தப்பாடலுக்குள்ள அவ்ளோ பாந்தமா சேர்ந்து ஒலிக்கும். இளையராஜாவே பெண் குரல்ல பாடினதோன்னு சமயத்துல நினைச்சுக்குவேன் “ வாக்மேனின் ஒரு முனையை என் காதிலும், மற்றொன்றை அவன் காதிலும் வைத்துக்கொண்டு சந்த்ரு பேசிய இந்த 13 வருட பழைய உரையாடலை இரண்டு…
