Month: July 2010
-
மதராசபட்டினம் (2010)
’கிரீடம்’ என்கிற லோகித்தாஸின் அருமையான திரைக்கதையை சொதப்பி தன் திரைவாழ்வை துவக்கிய இயக்குனர் விஜய் மதராசபட்டினம் மூலம் புனர்ஜென்மம் பெற்றிருக்கிறார். சுதந்திரம் பெறாத இந்தியாவில் ஒரு ஆங்கில கவர்னரின் பெண்ணுக்கும், தமிழ் வண்ணான் பையனுக்கும் வரும் காதல் சுதந்திரம் பெற்ற பிறகு என்ன ஆனது என்பதுதான் மதராசபட்டினத்தின் அடிப்படை முடிச்சு. மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்றால் வண்ணாரப்பேட்டை நிலங்கள் திருப்பித்தரப்படும் என்று ஒரு லகான், வெள்ளைக்கார கமிஷனருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணை அடைய வரும் அடிமைப்பையனின் டைட்டானிக் என்று இரண்டு பெரிய…
